இந்திய தடுப்பூசிகள் பாதுகாப்பானது, தரமானது! புகழ்ந்து தள்ளிய சீனா

சீனாவின் ஊகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கொரோனாவை பரப்பியது சீனா தான் என அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன.

உலகளவில் பெரும் உயர் சேதத்தை ஏற்படுத்திய கொரோனா கட்டுக்குள் வந்தாலும், எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதால் இன்னும் மக்கள் வெளியே வர பயப்படுகிறார்கள். கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மூலம் தான் தீர்வுகாண முடியும் என்பதால் உலகளவில் பல முன்னணி நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இறங்கின.

இந்தியாவும் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்காக
மற்ற நாடுகளை சார்ந்திருக்காமல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டுள்ள கோவிஷீல்டு
மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வரும் 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி நம்பகமானவை என சீனா பாராட்டியுள்ளது. இதுகுறித்து சீனாவின் க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில், இந்திய தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட், சீன தடுப்பூசிகளுக்கு எவ்விதத்திலும் சளைத்தவை அல்ல என கூறியுள்ளது. தரம் மற்றும் உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவின் தடுப்பூசிகள் மிகச்சிறப்பானவை. மேலும் இந்திய தடுப்பூசிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை, பாதுகாப்பானவை எனபுகழ்ந்துள்ளது. அவற்றை பயன்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

சீனாவின் ஜிலின் பல்கலைக்கழகத்தின் லைஃப் ஆஃப் சயின்ஸ் துறை குழு ஒன்று, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தை பார்வையிட்ட பின், இந்திய தடுப்பூசி உற்பத்தி மற்றும் சப்ளை தரம் வாய்ந்ததாக இருக்கிறது எனவும், இந்திய தடுப்பூசிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்ற நாடுகளின் தடுப்பூசியை விட இந்திய தடுப்பூசி விலை குறைவாகவும், தரமானதாகவும் இருப்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்திய தடுப்பூசியை குறைந்த வெப்பநிலையிலும் பராமரிக்கலாம். பல நாடுகளும் தடுப்பூசிக்காக இந்தியாவுடன் பேச்சு நடத்திவருகின்றன.

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப பிரேசில் அதிபர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நேபாளம் 1.20 கோடி தடுப்பூசிகளும், பூடான் 10 லட்சம் தடுப்பூசிகளும், வங்கதேசம் 3 கோடி தடுப்பூசிகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. மேலும் மியான்மர், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு மற்றும் தென்னாப்ரிக்கா உட்பட பல நாடுகள் தடுப்பூசிக்காக இந்திய அரசுடன பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *