தைவான் மீது போர் தொடுக்க சீனா போட்ட திட்டம்.. லீக்கான ஆடியோவால் பரபரப்பு..

சீனாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங் ட்வீட் செய்த ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் சீனா தைவானை கைப்பற்றுவது தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

யூடியூப் சேனலான LUDE Media சேனலில் வெளியிடப்பட்ட 57 நிமிட ஆடியோ கிளிப் சீன இராணுவத்தின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் உரையாடல் பற்றி வெளியிட்டுள்ளது. தைவான் மீதான ஜி ஜின்பிங்கின் இராணுவத்தின் திட்டத்தை அம்பலப்படுத்த விரும்பும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அதிகாரிகளால் இந்த பதிவு கசிந்ததாக யூடியூப் சேனல் கூறியுள்ளது.

இந்த ஆடியோ தைவான் மூலமாக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குவாங்டாங் இராணுவ பிராந்தியத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சோவ் ஹி, குவாங்டாங் மாகாண குழுவின் நிலைக்குழு உறுப்பினர் வாங் ஷோக்சின் மற்றும் குவாங்டாங் இராணுவ பிராந்தியத்தின் அரசியல் ஆணையர் உட்பட சில உயர்மட்ட மக்கள் விடுதலை இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், தைவான் சுதந்திர படைகளை தாக்குவது, போரை தொடங்குவது, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாப்பது உள்ளிட்டவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் ஒரு கூட்டு சிவிலியன் இராணுவ கட்டளையை திறப்பது, திட்டமிடல், வரிசைப்படுத்துதல், ஒழுங்கமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ட்ரோன்கள், படகுகள் போன்றவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்க அந்த நிறுவனங்களின் பட்டியலை அதிகாரிகள் கூட்டத்தில் வெளியிட்டனர். சூகாய் ஆர்பிடா, சென்ஷன் ஏரோஸ்பேஸ் டாங்ஃபாங்ஹாங் சாட்டிலைட் கார்ப்ரேஷன், போஷன் டெலியா மற்றும் ஜி ஹூவா லெபாரட்டரி ஆகிய நான்கு நிறுவனங்கள் நான்கு செயற்கைகோள் பிரிவினைகளை உருவாக்கியதாக அதிகாரிகள் விவாதித்தனர்.

எங்களிடம் மொத்தம் 16 குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள் உள்ளன. 0.5 முதல் 10 மீட்டர் உலகளாவிய ரிமோட் அல்ட்ரா ஹை ஆப்டிகல் ரெசல்யூஷன் சென்சிங் மற்றும் இமேஜிங் திறன்களுடன் இருப்பதாக விவாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு போர் மண்டலங்களால் குவாங்டாங் மாகாணத்திற்கு கொடுக்கப்பட்ட பணி மொத்தம் 20 பிரிவுகள் மற்றும் 239 பொருட்கள் தொடர்பானது.

இதில் 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்கள், 1,653 யூனிட் ஆளில்லா உபகரணங்கள், 20 விமான நிலையங்கள் மற்றும் கப்பல்துறைகள், ஆறு பழுது மற்றும் கப்பல் கட்டும் தளங்கள், 14 அவசர இடமாற்ற மையங்கள், தானிய கிடங்குகள், மருத்துவமனைகள், ரத்த நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட பணிகள் குவாங்டாங் மாகாணத்திற்கு கொடுக்கப்பட்டதாக ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேசிய பாதுகாப்பு அணிதிரட்டல், ஆட்சேர்ப்பு அலுவலகம், புதிய இராணுவ சேவை பணியாளர்கள், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் மாகாணத்தில் இருந்து மொத்தம் 15,500 பணியாளர்கள், சிறப்பு திறமையானவர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவை வேலைகள் மாகாணத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

Also Read: அணுசக்தியில் இயங்கும் புதியவகை தாக்குதல் நீர்மூழ்கிகப்பலை வடிவமைத்த சீனா..!

மேலும் 64 10,000 டன் ரோல் ஆன்/ரோல் ஆஃப் கப்பல்கள், 38 போர் விமானங்கள். 588 ரயில் பெட்டிகள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட 19 சிவில் வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்குமாறு மாகாணத்தை தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையை கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் மேற்கோள் காட்டினர். இவ்வாறு அந்த வெளிவந்த ஆடியோ கிளிப்பில் தைவானை கைப்பற்ற தீட்டப்பட்ட திட்டம் பற்றி வெளிவந்துள்ளது.

Also Read: உலகளவில் வலிமையான விமானப்படை.. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..

இந்த நிலையில் ஐப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் செய்தியாளர்கள் சந்திப்பில், சீனா தைவானை கைப்பற்ற நினைத்தால் அமெரிக்கா தனது இராணுவத்தை தைவானுக்கு ஆதரவாக நிறுத்தும். அமெரிக்கா ஒரு சீன கொள்கையை கொண்டுள்ளது, ஆனால் அது மக்கள் குடியரசு சீனா என்ற சீன அரசை மட்டும் தான் மாறாக தைவானும் சீனாவின் அங்கம் என கூற்றை அமெரிக்கா அனுமதிக்காது என கூறியுள்ளார்.

Also Read: மொரீஷியஸ் அகலேகா தீவில் இந்திய இராணுவ தளம்..? P-8I விமானத்தை நிறுத்த முடிவு..

Leave a Reply

Your email address will not be published.