இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழிக்க சீனா போட்ட திட்டம்..
இந்தியாவுக்கு S-400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு வந்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு சீனா திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் S-400 ஏவுகணை அமைப்பு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
இதனை புதின் இந்தியா வரும்போது துவக்கி வைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவிடமும் S-400 ஏவுகணை வான்பாதுகாப்பு அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் உள்ளது. இந்தியா தனது S-400 ஏவுகணை அமைப்பை சீன எல்லையில் நிறுத்த உள்ளது. இதனால் தனக்கு ஆபத்து ஏற்படும் என சீனா அஞ்சுகிறது.
இதனால் தன்னிடம் உள்ள S-400 அமைப்பை வைத்து அதனை அழிப்பதற்கான சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கலாம். ஆனால் அது சற்று கடினம். அதனால் மின்னணு தாக்குதல் முறையில் சீனா இறங்கியுள்ளது.
மின்னணு தாக்குதல் மூலம் வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை நிரந்தரமாகவோ அல்லது சில மணி நேரத்திற்கோ அதனை செயலிழக்க வைக்க முடியும். ஒருளேளை இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தும் போது தாக்குதல் நடத்தும் நேரத்திற்கு மட்டும் S-400 வான்பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைத்து தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.
Also Read: J-20 விமானத்தில் பழைய எஞ்சினை வைத்து கொண்டு ஐந்தாம் தலைமுறை விமானம் என கூறும் சீனா..
இதற்காக தனது இராணுவத்தில் உள்ள சைபர் தாக்குதல் ஒரு பிரிவை சீனா ரஷ்ய எல்லையில் இருந்து இந்திய எல்லைக்கு அனுப்பி உள்ளது. சீனாவின் இந்த சைபர் தாக்குதல் பிரிவு PLA மூலோபாய ஆதரவு படை (PLASSF) என அழைக்கப்படுகிறது. சமீப காலமாக சீனா மற்றும் பாகிஸ்தானை தளமாக கொண்டு இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் கிட்டதட்ட 100 பெரிய சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 20 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்களில் மாநில காவல்துறை, கூட்டுறவு வங்கி மற்றும் பிற அரசு துறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. முக்கியமாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறைகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
Also Read: பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்கள்.