திபெத்தில் 5G தொழிற்நுட்பத்தை நிறுவிய சீனா..

சீனா திபெத்தில் உள்ள கண்பாலா ரேடார் நிலையத்தில் 5G சிக்னல் தளத்தை திறந்துள்ளது. இதனை சீனாவின் அதிகாரபூர்வ இராணுவ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேடார் மிக உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே உயரமான இடத்தில் உள்ள ரேடார் நிலையம் திபெத்தில் உள்ளது மட்டுமே. அதாவது 5,374 மீட்டர் உயரத்தில் இந்த 5G சிக்னல் தளம் அமைந்துள்ளது.

இந்த மலையானது இந்தியா மற்றும் பூடானுக்கு அருகில் உள்ள நாகர்ஸி கவுண்டியில் அமைந்துள்ளது. சீனா திபெத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து அதனை சீனாவின் ஒரு பகுதி என உரிமை கொண்டாடி வருவது தெரிந்தது தான் என்றாலும் இப்போது அங்கு போர் விமானதளம், ரயிஸ் நிலையம் போன்றவற்றையும் மேம்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இப்போது அங்கு 5G தொழிற்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் சீனா திபெத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படையினரை தொடர்பு கொள்ள மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்த தொழிற்நுட்பத்தை சீனா பயன்படுத்த உள்ளது.

மேலும் எல்லை பிரச்சனையின் போது விரைவாக துருப்புகளை தொடர்பு கொள்ளவும் இந்த 5G சேவையை சீனா அங்கு நிறுவியுள்ளது. இந்த 5G தொழிற்நுட்பத்தை முக்கியமாக இராணுவத்திற்காகவே சீனா அமைத்துள்ளது. ஏற்கனவே ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து சீனா திபெத்தில் 5G தொழிற்நுட்பத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இந்த நிலையில் பணி முடிவடைந்ததை அடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *