J-20 விமானத்தில் பழைய எஞ்சினை வைத்து கொண்டு ஐந்தாம் தலைமுறை விமானம் என கூறும் சீனா..

சீனா தனது J-20 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர்விமானத்தை ஷூகாய் விமான கண்காட்சியில் காட்சிபடுத்தி உள்ளது. இந்த விமான கண்காட்சி செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 வரை சீனாவின் ஷூகாய் நகரில் நடைபெற்றது. தற்போது J-20 விமானத்தின் எஞ்சின் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த போர் விமானம் நான்காம் தலைமுறையை சேர்ந்தது என விவரம் அறிந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். சீனா இன்னும் இந்த J20 போர் விமானத்திற்கு சொந்தமாக எஞ்சினை தயாரிக்கவில்லை. இந்த போர் விமானத்தில் சீனா WS-10 எஞ்சினை பொருத்தியுள்ளது.

ஆனால் இந்த எஞ்சின் ரஷ்யாவின் AL-31F எஞ்சின் ஆகும். அதனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது தான் WS-10 எஞ்சின். ஆனால் இந்த எஞ்சினை சீனாவின் நான்காம் தலைமுறை போர் விமானங்கள் தான் பயன்படுத்தி வருகின்றன. இதனால் சீனாவின் J-20 போர் விமானம் நான்காம் தலைமுறை போர் விமானம் என கூறப்பட்டது.

பின்னர் WS-15 என புதிய எஞ்சினை சீனா தயாரித்தது. ஆனால் அதனை சீன விமானப்படை நிராகரித்துவிட்டது. பின்னர் WS-10 எஞ்சினை மறுவடிவமைத்து WS-10A என்ற எஞ்சினை தயாரித்தது. ஆனால் அதனையும் சீன விமானப்படை நிராகரித்து விட்டது. பின்னர் WS-10B மற்றும் WS-10C என்ற எஞ்சினை சீனா உருவாக்கியது. ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

பின்னர் ரஷ்யாவின் மிக்-29 விமானத்தில் பயன்படுத்தப்படும் எஞ்சினை வாங்கி வந்து அதனை போல் தனது J-20 விமானத்திற்கு பொருத்தி உள்ளது. மிக்-29 போர் விமானம் நான்காம் தலைமுறை விமானம் ஆகும். இதனால் மீண்டும் எஞ்சினை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு சீனா தள்ளப்பட்டது.

Also Read: பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம்..? சிக்கலில் இம்ரான்கான்.. நேட்டோ, பாகிஸ்தான் இராணுவம் இடையே பேச்சுவார்த்தை..

இந்த முறை WS-10C என்ற இஞ்சினை உருவாக்கி அதனை தனது ஐந்தாம் தலைமுறை போர் விமானமான J-20 விமானத்தில் பொருத்தி அதனை தான் ஷூகாய் விமான கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் F-22 ரேப்டர் ஐந்தாம் தலைமுறை விமானத்தில் பயன்படுத்தப்படும் F-119 எஞ்சினை போல் ஒன்றை உருவாக்கி வருவதாக சீனா கூறியது.

Also Read: பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்கள்.

பின்னர் ஐந்தாம் தலைமுறை எஞ்சினுக்காக ரஷ்யாவிடம் சீனா பேச்சுவார்த்தை நடத்தியிள்ளது. ஆனால் எஞ்சின் மட்டும் கொடுத்தால் அதனை சீனா காப்பி அடித்து விடுவதால் எஞ்சின் மட்டும் தனியாக தரமுடியாது என ரஷ்யா கூறிவிட்டது. எஞ்சின் வேண்டும் என்றால் Su-35 போர் விமானத்தை வாங்க வேண்டும் என ரஷ்யா நிபந்தனை விதித்தது. அதாவது ஒரு எஞ்சின் வேண்டும் என்றால் இரண்டு Su-35 போர் விமானத்தை வாங்க வேண்டும் என கூறியது. சீனாவிற்கு 25 எஞ்சின் தேவைப்படுவதால் 50 Su-35 போர் விமானம் வாங்க வேண்டும். இதனால் வேறு வழியில்லாமல் தனது தயாரிப்பான WS-10C எஞ்சினை J-20 விமானத்தில் பயன்படுத்தி வருகிறது.

Also Read: ஆஸ்திரேலியா சென்றது அமெரிக்காவின் F-35A ஐந்தாம் தலைமுறை போர் விமானம்.. சீனாவுக்கு மேலும் நெருக்கடி..

Leave a Reply

Your email address will not be published.