திபெத் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துவரும் சீனா.. சாட்டிலைட் புகைப்படம் வெளியானது.
இந்தியா சீனா இடையே தற்போது எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சீனா இந்திய எல்லையோரம் ஹெலிகாப்டர் தளங்களை அமைத்து வருவது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சீனா திபெத்தின் கோல்முட், ரூடாக், ஜெர்ஸ், நைல்மா மற்றும் சென்ல் போன்ற இடங்களில் ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த வருடம் சீனா மற்றும் இந்திய வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40 வீரர்களும் உயிரிழந்தனர். அதனை அடுத்து இந்தியா தனது எல்லைகளில் படுவேகமாக சாலைகள், பாலங்கள், விமானதளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களை அமைத்தது மற்றும் அமைத்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவும் இந்திய எல்லையை ஒட்டிய திபெத் பகுதிகளில் கடந்த சில வருடங்களாகவே விமான தளங்களை கட்டமைத்து வருகிறது. ஆனால் இமயமலை பகுதியில் காற்றின் அடர்த்தி குறைவு என்பதால் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் போர் விமானங்களை இயக்குவது இயலாத காரியம்.
இதனால் சீனா தற்போது ஹெலிகாப்டர் தளங்களை அமைத்து வருகிறது. இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கோல்மூட் என்ற இடத்தில் சீனா மிகப்பெரிய அளவில் ஹெலிகாப்டர் தளங்களை அமைத்து வருகிறது. அதாவது அந்த ஹெலிகாப்டர் தளத்தில் 300 ஹெலிகாப்டர்களை நிறுத்தும் வகையில் அந்த தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியான அக்சய் சின் பகுதியிலும் ஹெலிகாப்டர் தளங்களை அமைத்து வருகிறது.
Also Read: F-16V போர் விமானத்தை தனது விமானப்படையில் இணைத்த தைவான்.. உச்சகட்ட கோபத்தில் சீனா..
ஹெலிகாப்டர் போர் விமானத்தை போல் அதிவேகமாக செல்லாது. ஆனால் அதிக எண்ணிக்கையில் ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் வருவது இந்திய படைக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அடர்த்தி குறைந்த இடத்தில் ஹெலிகாப்டரை இயக்கும் வகையில் சீனா ஹெலிகாப்டரை தயாரித்து வருகிறது.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து மலைப்பகுதியில் இயக்கும் வகையில் KA-52 அலிகேட்டர் தாக்குதல் ஹெலிகாப்டரை சீனா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியா HAL நிறுவனம் தயாரித்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரை (LCH) இந்திய விமானப்படையில் இணைத்துள்ளது.
Also Read: சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனே காலி செய்யுங்கள்.. பாகிஸ்தானுக்கு இந்திய தூதர் பதிலடி..
இந்த LCH ஹெலிகாப்டரை லடாக் பகுதியில் இந்திய விமானப்படை இணைத்துள்ளது. இதுத்தவிர இந்திய விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர், சினூக் ஹெலிகாப்டர் மற்றும் MI-17 போன்ற ஹெலிகாப்டர்களும் உள்ளன. சீனாவின் ஹெலிகாப்டரை மேன்பேட் எனப்படும் தோள்பட்டையில் வைத்து இயக்கப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் எளிதாக வீழ்த்தி விட முடியும் என கூறப்படுகிறது.
Also Read: துபாய் ஏர் ஷோ 2021.. வானில் பறந்த இந்தியாவின் தேஜஸ்.. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..