ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் சீனாவா..? பிரம்மா செலன்னேவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ்..

நேற்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து பனி மூட்டத்தால் நிகழ்ந்து இருக்கலாம், அல்லது எஞ்சின் கோளாறால் நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்பட்டாலும், சிலர் இது வெளிநாட்டு சதி வேலையாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதக்கட்டுப்பாடு வல்லுநர் மற்றும் எழுத்தாளரான பிரம்மா செலன்னே கூறுகையில், சீனாவுடன் 20 மாதங்களுக்கும் மேலாக போர் சூழல் இருக்கையில் பிபின் ராவத் உயிரிழந்தது நாட்டிற்கு பேரிழப்பு. ஜெனரல் பிபின் ராவத்தின் உயிரிழந்ததை போலவே கடந்த ஆண்டு துவக்கத்தில் தைவானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி ஜெனரல் ஷென்-யி-மிங் மற்றும் இரண்டு முக்கிய ஜெனரல்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

இந்த இரண்டு விபத்துகளிலும் சீனாவை தீவிரமாக எதிர்க்கும் நாடுகளின் முக்கிய இராணுவ அதிகாரிகளே உயிரிழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த இரண்டு ஹெலிகாப்டர் விபத்துக்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அந்நிய சதி இருப்பதாக அர்த்தமில்லை. அப்படி ஏதேனும் கேள்வி இருந்தால் அது இந்த இரண்டு சம்பவங்களிலும் முக்கிய இராணுவ அதிகாரிகளை அழைத்து செல்லும் ஹெலிகாப்டரின் பராமரிப்பு பற்றியதே என தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

பிரம்மா செலன்னேவின் ட்விட்டை ரீட்வீட் செய்து பிரம்மாவிற்கு பதிலளித்துள்ள சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தியாவும் ரஷ்யாவும் S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதில் முன்னேறி வருவதால் இந்த விபத்தில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக சந்தேகிப்பது போன்றது. ஏனென்றால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்தது என தனது ட்வீட்டில் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Also Read : அட்லாண்டிக் நாடான ஈக்குவோடரியல் கினியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள சீனா.. இந்தியாவுக்கு ஆபத்தா..?

குளோபல் டைம்ஸின் ட்விட்டை ரீட்விட் செய்து பதிலளித்துள்ள பிரம்மா, ரஷ்யாவின் S-400 ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்குவதால், உயர்மட்ட இந்திய ஜெனரலை கொன்ற ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டுவதற்காக எனது ட்வீட்டை சீனாவின் ஊதுகுழல் தவறாக பயன்படுத்துகிறது. அதன் ட்வீட் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்களின் மோசமான மனநிலையை சுட்டிக்காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.

Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..

ஏற்கனவே பிபின் ராவத் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீட்டா ஹெலிகாப்டரில் நாகலாந்திற்கு பயணம் மேற்கொண்ட போது விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார். மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர். மேலும் கடந்த மாதம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சீனா தான் என பகிரங்கமாக கூறினார். இதற்கு சீன தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று CDS ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உண்மையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

Also Read: உயிரியல் போருக்கு தயாராக வேண்டும்.. BIMSTEC மாநாட்டில் பிபின் ராவத் எச்சரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.