பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி; Chennai Talks யூடியூப் சேனல் குழுவினர் 3 பேர் கைது

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்த எடுத்ததாக சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்தனர்.

இதனிடையே தனது யூடியூப் சேனலுக்காக பேட்டி எடுக்க பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள இளம்பெண்களிடம் 2020 வருடம் எப்படி போனது என பேட்டி எடுத்துள்ளனர். அதில் ஒரு பெண்ணிடம் மிகவும் ஆபாசமாக பேசி இருந்ததாக, பெசன்ட் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் மீது புகார் அளித்தார்.

விசாரணையை தொடங்கிய சாஸ்திரி நகர் போலீசார் யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் அசென் பாட்ஷா(23), கேமராமேன் அஜய் பாபு(24) மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *