மேற்குவங்கத்தில் நாரதா லஞ்ச வழக்கில் 2 அமைச்சர்கள் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ..?

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு முன்னாள் அமைச்சரை சிபிஐ கைது செய்துள்ளது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நாரதா ஸ்டிங் ஆப்ரேஜன் என்ற பெயரில் ஒரி வீடியோ சமூகவலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் திரிணாமுல் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஒரு போலி நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவாகியிருந்தது.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு CBI விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கை விசாரிக்க தொடங்கிய CBI திரிணாமுல் கட்சியை சேர்ந்த 15 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் தான் இன்று காலை வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் வீட்டில் CBI அதிரடியாக நுழைந்து அவர்களை கைது செய்தது. இதில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் எம்.எல்.ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் சிபிஐயால் இன்று கைது செய்யப்பட்டனர்.

இதனை அறிந்த திரிணாமுல் கட்சி தொண்டர்கள் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும் சிபிஐ அலுவலகத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வந்து தர்ணாவில் ஈடுபட்டார். என்னையும் கைது செய்யுங்கள் என கோஷம் எழுப்பினார்.

பின்னர் மாலை 5 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்ட மம்தா பானர்ஜி, நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இதுகுறித்து திரிணாமுல் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தேர்தலில் தோல்வி அடைந்ததால் பாஜக பலிவாங்கும் நோக்கத்திலேயே அமைச்சர்களை கைது செய்துள்ளதாக கூறினார். மேலும் சபாநாயகர் பிமான் பானர்ஜி கூறுகையில் சிபிஐ தன்னிடம் அனுமதி வாங்காமல் ஆளுநரிடம் அனுமதி வாங்கியது சட்டவிரோதமானது. நான் அலுவலகத்தில் தான் இருந்தேன் என்னிடம் அனுமதி வாங்கவில்லை என சபாநாயகர் தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில் கூறியதாவது, நாங்கள் ஆளுநரிடம் அனுமதி வாங்கிய பிறகே அமைச்சர்களை கைது செய்தோம். மேலும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதின் பேரில் தான் இதனை விசாரித்து வருவதாக கூறினர்.

அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து மேற்குவங்கத்தில் வன்முறை வெடித்தது. திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் கட்சி தொண்டர்கள் சட்டத்தை பின்பற்றவும், போராட்டத்தை தவிர்க்கவும் கேட்டுக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *