எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர்- மா.சுப்பிரமணியன்

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவித்ததுடன் தமிழக அரசு சார்பில் 60 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும்  பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.  இதனை இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் … Read more

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு   பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு   3 ஆண்டு சிறை தண்டனை விதித்து  விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து … Read more

பெற்றோர் முடி வெட்ட சொன்னதால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

சிவகங்கையில் பெற்றோர் முடி வெட்ட சொன்னதால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை‌ பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வரும் இளையராஜா (பழம் வியாபாரி). ஆனந்தவல்லி தம்பதியரின் மகன் வேல் என்ற வேல்முருகன்  வயது ( 15 ). கல்குறிச்சி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வேல்முருகன் அதிகமாக தலையில் முடி வளர்த்து கொண்டு ஸ்டைலாக ஊர் சுற்றியுள்ளார். பெற்றோர் முக்கியமாக அவருடைய … Read more

திமுக கவுன்சிலர்கள் வரும் 31-ம் தேதி உண்ணாவிரதம்! பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

கடலூரில் மாநகராட்சியில் 10 திமுக வார்டுகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் ராஜினாமா செய்ய உள்ளோம் என கவுன்சிலர்கள் அறிவித்துள்ளனர். கடலூர் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மொத்தம் 45 வார்டு உறுப்பினர்களை கொண்டது. இதில் கடலூர் மேயர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் ஒரு அணியாகவும், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். மேயர் தேர்தலின் போது இரண்டு … Read more

டிச. 12ல் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? விவரங்களை தாக்கல் செய்ய போலீஸ்க்கு ஐகோர்ட் உத்தரவு

காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசுவை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த  2018 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக  தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்  நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று … Read more

ஓபிஎஸ், பாஜக அரசுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன்

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் என்று டிடிவி அறிவித்திருந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் காரைக்குடியில் அமமுக  பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது பேசிய அவர், “பல கட்சியினருடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம், ஓபிஎஸ் அவருடைய நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். கூட்டணி குறித்த எந்த முடிவும் இப்போது எடுக்கப்படவில்லை. இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறும். ஜனநாய … Read more

தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் – துணைஅமைப்பாளர்கள் கூட்டம்!

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் இன்று 29.01.2024 திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை, பீளமேடு, காளப்பட்டி சாலை “சுகுணா கலையரங்கில்”, கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், திருமதி பூர்ணசங்கீதா சின்னமுத்து, திருமதி … Read more

தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்!!

66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக  வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை … Read more

ஸ்பெயின் நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்கள் வரவேற்றார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 271.2024 அன்று இரவு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று (281.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார். மேட்ரிட் சென்றடைந்த மாண்புமிகு … Read more

கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு உள்ளது உண்மை தான்

மேற்கு வங்கம், பஞ்சாபில் கூட்டணி பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணி உருவாக்குதற்கு முதன்முதலில் முயற்சி எடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 28 கட்சிகள் சேர்ந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கினர். அதில் முன்னிலை வகித்தவர் நிதிஷ்குமார் ஆனால் அவரே முன்னின்று கூட்டணியை உருவாக்க முயற்சி எடுத்தார் என்று சொல்ல முடியாது. ‘கூட்டணியில் … Read more