அம்பானி வீடு அருகே கைப்பற்றப்பட்ட கார்.. சச்சின் வாசேவை பணி நீக்கம் செய்யும் மும்பை காவல்துறை..?

மும்பை தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிமருந்துடன் கூடிய SUV காரை கைப்பற்றியது. இதில் தொடர்பு உள்ளதாக மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவை தேசிய புலனாய்வு அமைப்பு மார்ச் 13 அன்று கைது செய்தது.

இந்த நிலையில் அவரை பணி நீக்கம் செய்வதற்கான பணியை மும்பை சிறப்பு காவல்துறை தொடங்கியுள்ளது. சச்சின் வாசேவிற்கு தொழிலதிபர் மன்சுக் கிரேன் கொலையிலும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகிக்கின்றது.

இந்த நிலையில் மும்பை சிறப்பு காவல்துறை பிரிவு மகாராஷ்ட்ரா பயங்கரவாத தடுப்பு படைக்கு சச்சின் வாசேவிற்கு மன்சுக் கிரேன் கொலையுடன் தொடர்புடைய ஆவணங்களை வழங்குமாறு கூறியுள்ளது.

அந்த ஆவணத்தில் FIR நகல் மற்றும் மன்சுக் மனைவியின் வாக்குமூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதே போன்ற தகவல்களை NIAவிடம் சிறப்பு பிரிவு கோரியுள்ளது. இந்த ஆவணங்களை பெற்ற பின்னர் சிறப்பு காவல்துறை சச்சின் வாசேவை பணியில் இருந்து நீக்குவதற்கான பணியை தொடங்கியது.

மேலும் சச்சின் வாசேவுடன் சேர்த்து ரியாசுதின் காசி, விநாயக் ஷிண்டே புக்கி நரேஷ் கோர் ஆகியோரையும் NIA கைது செய்து இருந்தது. அவர்கள் தொடர்பான அறிக்கையையும் சிறப்பு காவல்துறை NIAவிடம் கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *