ஜம்மு காஷ்மீர் சோபியானில் காரில் வெடிகுண்டு தாக்குதல்.. 3 இராணுவ வீரர்கள் பலத்த காயம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் தனியார் வாடகை வாகனம் வெடித்து சிதறியதில் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த இராணுவ வீரர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மண்டல காவல்துறையின் அறிக்கையின் படி, வாகனம் வெடித்ததற்கு வாகனத்திற்குள் பொருத்தப்பட்ட கையெறி குண்டு அல்லது IED காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. சோபியானின் செடாவ் என்ற இடத்தில் தனியார் வாடகை வாகனத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெடிப்பின் தன்மை மற்றும் ஆதாரம், எறிகுண்டு அல்லது ஏற்கனவே வாகனத்திற்குள் பொருத்தப்பட்ட IED அல்லது பேட்டரியின் செயலிழப்பா என்பது குறித்து விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் கூறுகையில், சில நேரங்களில் தனியார் வாகனங்கள் பயணம் அல்லது இரகசிய நடவடிக்கைகளுக்கு நமது படைகளால் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் அவை முழுமையாக சரிபார்க்கப்படும். வெடிகுண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் பள்ளி இந்து ஆசிரியை ரஜினி பாலா சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. ரஜினி பாலா சுட்டுக்கொல்லப்பட்டது பொதுமக்கள் இடையே கண்டனத்தை தூண்டியது.

Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..

ரஜினி பாலாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, பாஜக செய்தி தொடர்பாளர் அல்தாப் தாக்கூர், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதேபோல் மே மாதம் காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றில் 3 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் மற்ற 4 பேர் பொதுமக்கள் ஆவர்.

Also Read: காஷ்மீரில் மற்றொரு இந்து பெண்ணை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்..

Leave a Reply

Your email address will not be published.