கனடாவின் எதிரி அமெரிக்கா தான்.. கனடா உளவுத்துறை அறிக்கை தாக்கல்..?

கனடாவின் ஃபாக்ஸ் நியூஸ் போன்ற பழமைவாக ஊடகங்களின் அச்சுருத்தல் உட்பட அமெரிக்காவில் ஜனநாயக விரோத சக்திகளின் வளர்ந்து வரும் செல்வாக்குடன் கனடா போராட வேண்டியிருக்கும் என கனடாவின் உளவுத்துறை நிபுணர்களின் பணிக்குழு புதிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்கா நமது நட்பு நாடு, ஆனால் அது அச்சுறுத்தல் மற்றும் ஸ்திரமின்மைக்கான ஆதாரமாகவும் மாறக்கூடும் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை இயக்குநர்களின் பணிக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தூதுவர்கள் மற்றும் கல்வியாளர்கள், குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேசிய பாதுகாப்பை எப்படி அணுகுகிறோம் என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இருவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பணிக்குழுவின் இணை இயக்குநரும், ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் பொது மற்றும் சர்வதேச விவகார பள்ளியின் இணை பேராசியருமான தாமஸ் ஜூனேவ், கனடாவின் வலதுசாரி தீவிரவாதம் உள்நாட்டில் வளர்ந்தாலும், தீவிரவாத குழுக்களிடையே எல்லை தாண்டிய தொடர்புகள் ஆபத்தானவை என கூறியுள்ளார்.

மேலும் கனடாவிலும் அமெரிக்காவிலும் வலதுசாரி தீவிரவாதிகளுக்கு இடையே வளர்ந்து வரும் நாடு கடந்த உறவுகள் உள்ளன. நிதி பரிமாற்றம், மக்கள் இயக்கம், யோசனைகளின் இயக்கம், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் பிற பழமைவாத ஊடகங்கள் போன்றவற்றின் ஆதரவு தீவிரவாத இயக்கங்களுக்கு உள்ளதாக தாமஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஜனநாயக பின்னடைவின் தீவிர அபாயங்கள் உள்ளன. இவை நமது இறையாண்மைக்கும், நமது பாதுகாப்புக்கும், சில சமயங்களில் நமது ஜனநாயக நிறுவனங்களுக்கும் கடுமையான அச்சுருத்தலாக அமையும். எனவே நாம் அமெரிக்கா உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தாமஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வருட பிப்ரவரியில் எல்லை கடந்து செல்லும் அனைத்து சரக்கு வாகன ஓட்டிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கனடா அரசு தெரிவித்து இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரக்கு வாகன ஓட்டிகள் டிராக்டர் கான்வாய் பேரணி நடத்தினர். இது வன்முறையாக மாறியதால் கனடா பிரதமர் மறைவான இடத்தில் பதுங்கினார்.

Also Read: நேட்டோவில் இணைய உள்ள பின்லாந்து.. சைமா பிரச்சனையை தூசி தட்டிய ரஷ்யா..

சில போராட்டகாரர்கள் ஐனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி எரிய வேண்டும் என கூறினர். இந்த போராட்ட களத்தில் ஒரு ஆயுத களஞ்சியத்தை காவல்துறை கைப்பற்றினர். நான்கு பேர் இப்போது கொலைக்கு சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

கனேடிய எதிர்ப்புகள் அமெரிக்காவில் உள்ள அரசியல்வாதிகளிடம் இருந்தும், ஃபாக்ஸ் நியூஸ் போன்ற ஊடகங்களிலிருந்தும் ஆதரவை பெற்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனடா மீதான அச்சுருத்தல்களை பற்றி நாம் சிந்திக்கும்போது, சோவியத் இராணுவ அச்சுருத்தல் பற்றி சிந்திக்கிறோம், அல்கொய்தா அச்சுருத்தல், சீனாவின் எழுச்சி, மற்றும் உக்ரைன் மோதல் பற்றி சிந்திக்கிறோம்.

Also Read: பாகிஸ்தானில் பொருளாதாரம், தண்ணீரை தொடர்ந்து தற்போது கோதுமை நெருக்கடி..?

ஆனால் அமெரிக்காவில் இருந்து வரும் அச்சுருத்தல்களை பற்றி நாம் சிந்திப்பதில்லை என தாமஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான உரையாடல் சங்கடமானதாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் அது நடக்க வேண்டும். இது முற்றிலும் புதியது, இது ஓரு புதிய சிந்தனை முறை மற்றும் அமெரிக்கா உடனான எங்கள் உறவை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுப்பதாக அறிக்கையின இணை ஆசிரியர் ரிக்பி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.