பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்ட சிறிது தூரத்தில் பாகிஸ்தான் படகை கைப்பற்றிய BSF..
புதன்கிழமை பிரதமர் மோடியின் வாகனம் பஞ்சாபின் பெரோஸ்பூரின் மேம்பாலத்தில் விவசாயிகளின் போராட்டத்தால் நிறுத்தப்பட்டது. இந்த பாலத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படகு ஒன்று மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதி மிகவும் பதற்றமானதாக கருதப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இருப்பதால் எப்போதும் பதற்றமாக இருக்கும். பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்ட இடமும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவே உள்ளது. சமீபத்தில் இதே பகுதியில் இருந்து டிபன் வெடிகுண்டு மீட்கப்பட்டது.
தற்போது எல்லை பாதுகாப்பு படை (BSF) அதிகாரிகள் பெரோஸ்பூரில் உள்ள சட்லெஜ் ஆற்றில் இருந்து ஒரு பாகிஸ்தான் படகை வெள்ளி அன்று மீட்டுள்ளனர். மீட்கப்படும் போது படகு காலியாக இருந்தது. இந்த படகு எப்போது இங்கு வந்தது. இதில் என்ன கொண்டு வந்தார்கள். இதில் யாரெல்லாம் வந்தார்கள். இந்த படகை கொண்டு வந்ததன் நோக்கம் என்ன போன்ற விசாரணையை பாதுகாப்பு அமைப்புகள் துவக்கி உள்ளன.
BSF கூறுகையில், இந்த படகு பாகிஸ்தானுக்கு சொந்தமான படகு என கூறியுள்ளது. ஏனெனில் படகு மீட்கப்பட்ட இடத்தில் சட்லெஜ் நதியானது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. ஆற்றின் ஓட்டத்துடன் படகில் இந்தியாவிற்குள் நுழைந்து இருக்கலாம். அல்லது யாரோ வேண்டுமென்றே அனுப்பினார்களா போன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Also Read: சவுதி தூதரை அவமதித்த பாகிஸ்தான் அமைச்சர்.. இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்..
BSF படையினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவிற்குள் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வழங்க படகு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு படகு மீட்கப்பட்டது. தற்போது இந்த படகு மீட்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபானுக்கும் இடையே மோதல்.. எச்சரித்த தாலிபான்கள்.
இந்த விசாரணை குழுவில் உள்த்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு செயலர் சுதிர் குமார், ஐஜி இணை இயக்குனர் பல்பீர் சிங், எஸ்பிஜி ஐஜி எஸ்.சுரேஷ் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்பும் பெரோஸ்பூர் பகுதியில் பல முறை டிபன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி குறித்து உள்த்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசாங்கத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு குழுவையும் அமைத்துள்ளது.
Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதரவு..?