இந்த ஆண்டுக்குள் இந்திய-வங்கதேச எல்லையில் முழுவதுமாக வேலி அமைத்து சீல் வைக்கப்படும் என BSF தகவல்

திரிபுராவில் உள்ள் இந்திய-வங்கதேச எல்லையில் அடுத்த ஆண்டுக்குள் முழுவதுமாக வேலி அமைக்கப்படும் என திரிபுரா எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுஷாந்த குமார் நாத் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த குமார் கூறுகையில் வடகிழக்கு மாநிலங்களில் 856 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய வங்கதேச எல்லை உள்ளது. இவற்றில் 80-85 சதவீதம் அளவிற்கு ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள பகுதிகளில் வேலி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்குள் முழுவதுமாக வேலி அமைக்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 31 கிலோமீட்டர் தொலைவுக்கு நுண்துளை இணைப்புக்கான (Porous patch) பணிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் மேற்கு பகுதியில் ஒற்றை வரிசை வேலிகள் அமைக்கும் பணிகள் வேகம் பெற்றுள்ளன. இந்த ஒற்றை வேலிகள் கடந்த ஆண்டு 10 கிலோ மீட்டர் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வேலி அமைக்கும் பணியுடன் சேர்த்து மின்விளக்குகளும் அமைக்கப்பட்டு வருவதாகவும் சுஷாந்த கூறினார். அடுத்த ஆண்டிற்குள் திரிபுரா மாநிலத்தின் இந்திய-வங்கதேச எல்லையின் முழு பகுதியிலும் வேலிகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சுஷாந்த தெரிவிதுள்ளார். சமீப காலமாக அகதிகள் ஊடுருவல் மற்றும் போதை பொருள் கடத்தல் அதிகமாகி உள்ள நிலையில் வேலி அமைக்கும் பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Also Read: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது..?

மேலும் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதை பற்றி குறிப்பிட்ட சுஷாந்த, 2017 ஆம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்ட நேஷ்னல் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் திரிபுரா (NLFT) அமைப்பை சேர்ந்த 31 கிளர்ச்சியாளர்கள் சரணடைந்துள்ளதாக கூறினார். மேலும் நேற்று இரண்டு NLFT கிளர்ச்சியாளர்கள் சரணடைந்துள்ளதாகவும் அவற்றில் ஒருவர் ஆயுத பயிற்சி பெற்றவர் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு சர்வதேச எல்லையில் பதுங்கியிருந்த 218 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 35 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுஷாந்த கூறினார்.

Also Read: இலங்கையின் திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு ஆலையை 50 வருட குத்தகைக்கு எடுத்த இந்தியா..?

Leave a Reply

Your email address will not be published.