PFI மற்றும் SDPI இரண்டும் பயங்கரவாத அமைப்புகள்: கேரள உயர்நீதிமன்றம்

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) ஆகியவை தீவிர வன்முறை செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகள் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SDPI மற்றும் PFI அமைப்பினரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் RSS தொண்டர் சஞ்சித்தின் மனைவி அர்ஷிகா CBI விசாரணை கோரிய வழக்கில், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சோஷியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) ஆகியவை வன்முறை செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பு என குறிப்பிட்டார்.

ஆனால் அவை தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மே 5 ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்ட நிலையில் , அதன் உத்தரவு நகல் நேற்று வெளியானது. சஞ்சித் மனைவி ஆர்ஷிகா CBI விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கில் மாநில அல்லது தேசிய அளவிலான தலைவர்களுக்கு தொடர்பு இல்லை என விசாரணை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

90 நாட்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய போலிசார் உறுதி கொண்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளில் சிலர் தலைமறைவாக உள்ளார்கள் என்பதற்காக மட்டும் CBI விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அமைப்புக்கு இந்த வழக்கில் சிறப்பு ஆர்வம் இருப்பதாகவோ அல்லது குற்றவாளிகளை காப்பதில் ஆர்வம் இருப்பதாகவோ தெரியவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட 27 வயதான சஞ்சித் தேனாரி மண்டலத்தின் RSS பிரமுகராக இருந்தார். நவம்பர் 15 அன்று சஞ்கித் தனது மனைவி அர்ஷிகாவை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்லும் போது மர்ம நபர்கள் பைக் மீது காரை விட்டு மோதி ஐந்து பேர் கொண்ட கும்பல் சஞ்சித்தை சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

Also Read: உ.பியில் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து சொந்த வீட்டையே இடித்து தள்ளிய ஆலம் சித்திக்..

இதில் சம்பவ இடத்திலேயே சஞ்கித் உயிரிழந்தார். சத்தம் கேட்டு கூட்டம் கூடியதால் மர்ம நபர்கள் தப்பியோடினர். இதனால் அவரது மனைவி உயிர் தப்பினார். இந்த நிலையில் இந்த வழக்கில் CBI விசாரணை கோரி சஞ்சித்தின் மனைவி மனு தாக்கல் செய்தார். அதில் தனது கணவர் தேனாரி மண்டலம் RSS செயலாளராக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் அவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆகிய இரண்டையும் எதிர்த்தார். சஞ்சீத் சமூகங்களுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட முயன்றார் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இருந்தார். SDPI மற்றும் PFI ஆகிய இரண்டும் அச்சுறுத்தல், வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் மூலம் பிற சமூகங்களை மதம் மாற்றுவதில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.

Also Read: பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?

இவை இந்தியாவிற்கு வெளியே வேர்களை கொண்டிருக்கின்றன. விசாரணை நிறுவனம் சரியான விசாரணையை நடத்தவில்லை. இதனால் CBI விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என சஞ்சீத் மனைவி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த நிலையில் மாநில புலனாய்வு அமைப்புகளே விசாரணையை சரியா நடத்துவதாக கூறி CBI விசாரணை கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Also Read: ஜம்முவின் செனாப் ஆற்றில் நீர்மின்நிலைய கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு..

Leave a Reply

Your email address will not be published.