பாகிஸ்தானின் கராச்சியில் வெடிகுண்டு தாக்குதல்.. நான்கு சீனர்கள் உயிரிழப்பு..?

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் நான்கு சீன மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலா என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. இன்ஸ்டிடியூட் அருகே பலத்த சத்தத்துடன் வேன் ஒன்று வெடித்தது. இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷடன் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் நுழைவு வாயிலில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடந்த வேனில் குறைந்தப்பட்சம் 8 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் நான்கு சீன மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து ரேஞ்சர்ஸ் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Also Read: மேற்கு கடற்பரப்பில் வெற்றிகரமாக போர் பயிற்சி மேற்கொண்ட இந்திய கடற்படை..

காயமடைந்தவர்களை உடனடியாக டவ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிந்து முதல்வர் முராத் அலி ஷா இந்த சம்பவத்தை பார்வையிட்டு பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் SSP உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் குண்டுவெடிப்பின் தன்மை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. வெடிவிபத்து எரிவாயு சிலிண்டரால் ஏற்பட்டுருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் என்ன என தெரியவில்லை. இதுவரை எந்த தகவலையும் அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.

Also Read: தமிழக மாவோயிஸ்ட் உட்பட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது NIA..

பாகிஸ்தானில் இருக்கும் சீனர்கள் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் சீனர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு துறைமுகம் மற்றும் சுரங்கத்தில் வேலை பார்க்கும் சீனர்கள் பலுசிஸ்தான் போராளி குழுக்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதுவும் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.