காபூலில் குண்டுவெடிப்பு.. அதற்கு காரணமான ஐஎஸ் அமைப்பினரை தேடி வரும் தாலிபான்கள்..

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுகிழமை காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததை அடுத்து அதற்கு காரணமானவர்களை தாலிபான்கள் தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் இறந்த ஜபிஹூல்லா முஜாஹீத் தாயாருக்காக பிரார்த்தனை நடத்தும் விழா ஞாயிற்றுகிழமை ஈத்ஹாக் மசூதியில் நடைபெற்றது. அப்போது நுழைவுவாயிலில் குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதற்கு எந்த அமைபும் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும் தாலிபான்கள் காபூலை கைப்பற்றியதில் இருந்து இஸ்லாமிய அரசு குழு என்ற ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 35 தாலிபான்கள் பலியாகினர். அதே போல் அமெரிக்க படைகள் வெளியேறிய போதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 170 ஆப்கானிஸ்தான் பொதுமக்களும் 13 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்தனர். மேலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் படிக்கும் பள்ளியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 80 குழந்தைகள் பலியாகினர். இதற்கும் இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றது. தாலிபான்கள் மற்றும் இஸ்லாமிய அரசு குழு இருவருமே சன்னி முஸ்லிம் என்றபோதும் கொள்கை மற்றும் மத ரீதியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் தாலிபான்கள் மீது ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Also Read: பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?

கிழக்கு மகாணமான நங்கர்ஹார் மற்றும் வடக்கு பகுதியில் உள்ள கைர் கானாவில் இஸ்லாமிய அரசு குழு அலுவலகத்தில் தாலிபான்கள் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் இதில் எத்தனை ஐஎஸ் அமைப்பினர் இறந்தனர் என தெரியவில்லை. தாலிபான்களுக்கு எதிராக ஐஎஸ் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தாலிபான்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல்.. பொதுமக்கள் ஒருவர் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published.