டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்..? உளவுத்துறை எச்சரிக்கை..

புதுதில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே குறைந்த தீவிரம் கொண்ட IED குண்டுவெடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பு நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில் மீண்டும் பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல் தூதரகத்திற்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த ஐனவரி 29, 2021 ஆனது இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 29 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நிறைவு செய்த தினத்தோடு ஒத்துப்போனது. இந்த நிலையில் செப்டம்பரில் யூதர்களின் விடுமுறையை முன்னிட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: இலங்கையை தொடர்ந்து துருக்கியின் பணவீக்கம் 70% அதிகரிப்பு..

கடந்த ஆண்டு நடந்ததை போன்று பயங்கரவாதிகள் இஸ்ரேல் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தலாம் என ரா எச்சரித்துள்ளது. ஈரான் இன்டர்நேஷனல் செய்தியின்படி, டெல்லியில் உள்ள தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அருகில் உள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒரு பாரசீக தொலைகாட்சி வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பு எச்சரிக்கைகள் தீவிரமானது என கூறியுள்ளது. ஈரானுடன் இணைந்த போராளிகளின் இலக்குகளில் டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகமும் உள்ளதாக இஸ்ரேலிய ஆதாரத்தை மேற்கோளிட்டு கூறப்பட்டுள்ளது.

Also Read: சீனாவின் கப்பல் பொறி.. மற்றொரு நெருக்கடியை சந்திக்கும் உலக நாடுகள்..

டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதரகத்தை சுற்றியுள்ள வீதிகள் தடுக்கப்பட்டு, துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நிகழ வாய்ப்பு இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் காவல்துறையும், பயங்கரவாத எதிர்ப்பு படையும் சமீபத்தில் பாதுகாப்பு பயிற்சியை மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.