விமான பராமரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற தமிழக நிறுவனத்துடன் போயிங் ஒப்பந்தம்..

விமானங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு (MRO) மையமாக இந்தியாவை மாற்றுவதற்காக திட்டங்கள் தற்போது வேகமடைந்துள்ளன. இதற்கான பணிகள் தமிழகத்தின் ஓசூரில் உள்ள ஏர் ஓர்க்ஸ் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.

மூன்று P-8I நீண்ட தூர கடல் ரோந்து மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களின் பராமரிப்பு சோதனைகளை மேற்கொள்வதற்காக இந்திய கடற்படை அமெரிக்காவின் போயிங் மற்றும் இந்தியாவின் ஏர் ஒர்க்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முதல் P-8I விமானம் 2013ல் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட நிலையில், 12வது P-8I விமானம் 2022 பிப்ரவரியில் வழங்கப்பட்டது.

அமெரிக்காவை தவிர இந்த விமானத்தை இயக்கும் முதல் நாடு இந்தியா ஆகும். மூன்று P-8I விமானங்களும் ஒரே நேரத்தில் கடுமையான பராமரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நுட்பங்களை ஒரே நேரத்தில் பராமரிப்பது பொதுவாக அமெரிக்கா மற்றும் ஜப்பானில் உள்ள MRO தளங்களில் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் இவை அனைத்தும் இந்தியாவில் உள்ள MRO தளங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தியாவை MRO-வின் மையமாக மாற்றுவதற்கான புதிய தாராளமயமாக்கப்பட்ட திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. P-8I விமானமானது, கடல் ரோந்து, நீர்முழ்கி எதிர்ப்பு போர், மேற்பரப்பு எதிர்ப்பு போர், உளவு, கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும். 2020-21 ஆம் ஆண்டு சீனா உடனான மோதலின் போது லடாக்கில் உளவு பார்க்க P-8I பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read: ஆறாம் தலைமுறை போர் விமான தயாரிப்பில் இணைய உள்ள இந்தியா..?

போயிங் டிஃபென்ஸ் இந்தியாவின் இயக்குநர் சுரேந்திர அஹூஜா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள எங்கள் பாதுகாப்பு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பை உருவாக்கவும், இந்தியாவை இந்த துறையில் MRO-வின் மையமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் பங்களிக்கும் வகையில் ஏர் ஒர்க்ஸ் உடன் ஒத்துழைப்பை கட்டமைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என கூறியுள்ளார்.

Also Read: குவாட் கூட்டமைப்பில் இந்தியாவிற்கு மாற்றாக தென்கொரியா..?

போயிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர் ஒர்க்ஸ் உடனான தங்களது ஒத்துழைப்பானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட, போயிங் இந்தியா மீட்டெடுப்பு மேம்பாடு மற்றும் நிலைநிறுத்தல் (BIRDS) மையத்தின் கீழ் ஒரு முக்கிய படியாகும். BIRDS மையமானது, இந்தியாவை விமான போக்குவரத்து, பாதுகாப்பு மறுசிரமைப்பு மற்றும் நிலைநிறுத்தம் மையமாக மேம்படுத்த உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.