விண்வெளியில் திடீரென மாயமான கருந்துளை? விஞ்ஞானிகள் அதிர்ச்சி

விண்வெளியில் ஒரு மிகப்பெரிய கருந்துளை மாயமாகி இருப்பது விஞ்ஞானிகளுக்கிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபஞ்சத்தில் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் பிளாக் ஹோல்(Black hole) எனப்படும் கருந்துளையும் ஒன்று. ஏற்கனவே விண்வெளியில் பல மர்மங்கள் நீடிக்கும் நிலையில் இப்போது ஒரு நிகழ்வு விஞ்ஞானிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொலைதூரத்தில் இருந்த கேலக்சியில் அதன் மிகப்பெரிய கருந்துளை திடீரென மறைந்துவிட்டது.

இப்போது A2261-BCG என பெயரிடப்பட்டுள்ள இந்த Galaxy அதனுடைய கருந்துளையை இழந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால் அந்த கருந்துளை விண்வெளியில் வேறு எங்காவது மறைந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இதற்கு முன்பு மனிதர்களால் கண்டறியப்பட்ட எந்த ஒரு கருந்துளையும் மறைந்ததாக பதிவோ அல்லது குறிப்போ இல்லை. அப்படி மறைந்திருக்கும் முதல் கருந்துளை A2261-BCG தான். தற்போது பிரபஞ்சத்தில் எங்காவது மிதந்து கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கேலக்சியில் (Galaxy) வேறு எங்கிருந்தோ வெளிப்பட்ட ஒரு மிகப்பெரிய சக்தி இந்த கருந்துளையை வெளியேற்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கருந்துளையை வெகு தொலைவிற்கு தள்ளும் அளவுக்கு அந்த சக்தி ஆற்றல் மிக்கதாக இருந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

வட அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர்கள் இந்த விண்வெளி நிகழ்வை கண்டுபிடித்துள்ளனர்.

அறிவியலின் படி பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கேலக்சியிலும் ஒரு மிகப்பெரிய கருந்துளை உள்ளது. இந்த கருந்துளை நமது மில்கி வே எனப்படும் பால்வழியிலும் உள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கெய்ஹான் குல்டெக்கின் தலைமையில் இந்த கருந்துளை திடீரென காணாமல் போனதை இவரது குழு கண்டுபிடித்தது. இந்த நிகழ்வு நடப்பதற்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே அவர் A2261-BCG கருந்தூளையைப் பற்றி ஆராய்ச்சியை செய்துகொண்டு இருந்தார்.

மேலும் அவர் கேலக்சியின் மையத்தில் எதையும் தன்னால் பார்க்க முடியவில்லை எனவும், அதனால் அங்கு அந்த கருந்துளை இல்லை என உணர்ந்ததாக கூறினார்.

இதனை கவனித்த விஞ்ஞானிகள் குழு, அந்த கருந்துளை கண்டுபிடிக்க முடியாத ஏதாவது ஒரு இடத்தில் அந்த கேலக்சியிலேயே எங்காவது மறைந்திருக்கலாம் என நம்புகிறார்கள்.

ஒரு கருந்துளையை அதன் இடத்தில் இருந்து தள்ளுவதற்கு ஒரு மிகப்பெரிய சக்தி தேவைப்படுவதால், இது இரண்டு மிகப்பெரிய கருந்துளைகளின் மோதல் காரணமாக நிகழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அப்படி இருந்தாலும் இதை நிரூபிப்பது மிகவும் கடினம் என்கிறார்கள். ஏனெனில், இரண்டு மிகப்பெரிய கருந்துளைகளின் மோதல் இதுவரை நடந்ததில்லை. அதற்கு எந்த சாட்சியோ அல்லது பதிவோ இல்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *