மே.வங்கம் நந்திகிராமில் பாஜக பிரமுகரின் மனைவி தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..

மேற்கு வங்கத்தின் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொகுதியான நந்திகிராமில் பாஜக தொண்டரின் மனைவி திரிணாமுல் கட்சியினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூர்பா மெடினிபூர் மாவட்டத்தின் நந்திகிராம் தொகுதிக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே திரிணாமுல் கட்சியினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் பேரணியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் வந்து பார்த்த போது அவரது மனைவியை காணவில்லை. பின்பு அவரது வீட்டின் பின்புறம் மயங்கிய நிலையில் கண்டுபிடித்தார். அவரது உடல் முழுவதும் காயம் இருந்தது. மேலும் கழுத்தில் சேலையால் இறுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

மற்றவர்களின் உதவியோடு அவரை மீட்டு ரியாபரா மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தம்லுக் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். திரிணாமுல் கட்சியினரால் தனது மனைவி தாக்கப்பட்டு கற்பழிக்க பட்டுள்ளதாக கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தலைவர் திலிப் கூறுகையில் எங்கள் கட்சி தொண்டர் பேரணியில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பியபோது அவரது மனைவி தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். மம்தா கட்சியினர் தோல்வியை திசைதிருப்ப இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மற்றொரு பாஜக தலைவரின் தாயார் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

வரும் தேர்தலில் மம்தாவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என திலிப் கூறினார். பாஜகவின் குற்றச்சாட்டுக்கு இதுவரை திரிணாமுல் கட்சியினர் பதிலளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *