மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு.. மே.வங்கத்தில் 20 வெடிகுண்டுடன் இராணுவ முகாமை நோக்கி சென்ற நபர் கைது..

மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் நகரில் 20 வெடிகுண்டுகளுடன் அரசு பேருந்தில் பயணம் செய்த நபரை மேற்கு வங்க போலிசார் இன்று கைது செய்துள்ளனர். இதன் மூலம் மேற்குவங்கத்தில் நிகழவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பனகர் இராணுவ முகாமுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் வெடிகுண்டு கடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறையினர் அளித்த தகவலை அடுத்து கொல்கத்தாவில் இருந்து சூரிக்கு சென்று கொண்டிருந்த SBSTC பேருந்தில் இருந்து 20 வெடிகுண்டுகளுடன் சென்று கொண்டிருந்தவரை கல்கி போலிசார் கைது செய்தனர்.

வெடிகுண்டை கடத்திய முகமது சர்பராஸ் அன்சாரி என்ற இளைஞரை போலிசார் கைது செய்து பர்த்வான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த 20 வெடிகுண்டுகளும் பனாகரில் உள்ள ஒருவரிடம் வழங்கப்பட எடுத்து சென்றதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களது இலக்கு பனகர் இராணுவ முகாமாக இருக்கலாம் என கூறப்படுகிறது,

கொல்கத்தாவில் இருந்து சூரிக்கு அரசு பேருந்து புறப்பட்டபோது, பேருந்துக்குள் வெடிகுண்டு கடத்தப்படுவதாக பனகர் இராணுவ முகாம் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து உளவுத்துறையினர் கல்கி போலிசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து கல்கி போலிசார் பேருந்தை மடக்கி வெடிகுண்டு கடத்திய நபரை கைது செய்தனர்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவனை சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்..

வெடிகுண்டுகள் எங்கிருந்து வந்தது, எங்கே எடுத்து செல்லப்படுகிறது, யாரிடம் வழங்கப்பட இருந்தது என்பன குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு பேருந்தில் 20 வெடிகுண்டுகளை எடுத்து சென்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக மேற்கு வங்கத்தில் வங்க தேசத்தினர் பிடிபடுவதும், இது போன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறுவதும் மேற்குவங்கத்தில் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Also Read: S-500 ஏவுகணை அமைப்பை முதல் நாடாக வாங்குகிறது இந்தியா..? ரஷ்ய துணை பிரதமர் அறிவிப்பு..

Leave a Reply

Your email address will not be published.