இந்திய இராணுவத்திற்கு 100 ஹோவிட்சர்களை வழங்க உள்ள பாரத் ஃபோர்ஜ்..?

இந்திய இராணுவத்திற்கான இரண்டு ஹோவிட்சர்கள் உற்பத்தியாளர்களில் ஒருவரான பாரத் ஃபோர்ஜ் நிறுவனம், இந்திய இராணுவத்திற்கு முதல் ஆண்டில் 100 ATAGS ஹோவிட்சர்களை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. மற்றொரு நிறுவனம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆகும்.

புனேவை சேர்ந்த வாகன உதிரி பாங்ககளை தயாரிக்கும் பாரத் ஃபோர்ஜ் நிறுவனம், முதல் வருடத்தில் 100 ATAGS ஹோவிட்சர்களை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. பின்னர் உற்பத்தி திறன் இரட்டிப்பாக்கப்படும் என பாரத் ஃபோர்ஜின் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ATAGS ஹோவிட்சர்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்ட்டுள்ளது. இதனால் உள்ளுர் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் அமித் கல்யாணி கூறுகையில், இந்த முழு ஆர்டர் செயல்முறையும் இந்த நிதியாண்டில் நிறைவடையும். உற்பத்தியை பொறுத்தவரை, முதல் ஆண்டில் 100 ATAGS ஹோவிட்சர்கள் வரை உற்பத்தி செய்யப்படலாம். அதன் பிறகு ஆண்டுக்கு 200 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்ட அமைப்பு ராஜஸ்தானின் பொக்ரானில் ATAGS ஹோவிட்சர்களை சோதனைகளை வெற்றிகரமாக செய்தது. இதேபோல் கடந்த ஆண்டு ATAGS ஹோவிட்சர்களின் உயரமான சோதனைகள் முடிவடைந்தன.

Also Read: மியான்வாலியில் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம்..

இந்த ATAGS ஹோவிட்சர்கள் 48 கிலோமீட்டருக்கும் அதிகமான தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது. இது உலகின் மிகச்சிறந்த ஹோவிட்சர்களில் ஒன்றாகும். இந்த ATAGS ஹோவிட்சர்கள் ஓவ்வொன்றும் 15-22 கோடி மதிப்புடையவை. ஆரம்ப ஆர்டர் 100 ATAGS ஹோவிட்சர்கள். அடுத்தது கிட்டத்தட்ட 1,600 ஆர்டர்கள், சுமார் 24,000 கோடி மதிப்புடையவை என பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.

Also Read: வெளியே கசிந்த இராணுவ ரகசியம்.. 4 உயர் இராணுவ அதிகாரிகளை தூக்கிலிட்ட சீனா..

Leave a Reply

Your email address will not be published.