உயிரியல் போருக்கு தயாராக வேண்டும்.. BIMSTEC மாநாட்டில் பிபின் ராவத் எச்சரிக்கை..
டிசம்பர் 7 ஆம் தேதி BIMSTEC நாடுகளுக்கு இடையேயான மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்பு படை தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உயிரியல் போருக்கு தயாராக வேண்டும் என கூறியுள்ளார். உயிரியல் போர் வந்தால் அதனை சமாளிக்க நாடுகள் தயாராக வேண்டும் என்றும் ராவத் கூறினார்.
BIMSTEC என்பது இந்தியா, நேபாளம், பூடான், வங்காளாதேசம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட பல்துறை தொழிற்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பு ஆகும். மேலும் இது பிராந்திய ஒத்துழைப்பிற்கான குழுவாகும்.
BIMSTEC அமைப்பானது வங்காள விரிகுடாவில் வசிக்கும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து மற்றும் தொடர்பு, ஆற்றல், சுற்றுலா, தொழிற்நுட்பம், மீன்வளம், வேளாண்மை, பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, நாடுகடந்த குற்றம், பருவநிலை மாற்றம், கலாச்சார ஒத்துழைப்பு, மக்கள் தொடர்பு, சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதே முக்கிய நோக்கம்.
உயிரியல் போர் ஒரு புதிய வகையான போராக மாறி வருகிறது. இந்த உயிரியல் போர் வடிவம் பெற தொடங்கினால், இந்த வைரஸ்கள் மற்றும் நோய்களில் இருந்து நமது நாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க நம்மை வலுபடுத்திகொள்ள வேண்டும் என பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார்.
Also Read: உலகின் முதல் 100 ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்த 3 இந்திய நிறுவனங்கள்..
அந்த வைரஸ் வெவ்வேறு வடிவங்களில் மறப்போகிறது என்றால் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது ஒவ்வொரு செயலிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது முக்கியம் என ராவத் கூறினார். மேலும் கொரோனா போன்ற தொற்றுநோய் பேரழிவின் போது உலகின் ஆயுதப்படைகள் தனது குடிமக்களுக்கு உதவும் வகையில் சிறப்பு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என கூறினார்.
Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிபின் ராவத் கூறியதை போல அனைத்து நாடுகளும் உயிரியல் போரை சமாளிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், இயற்கை மற்றும் செயற்கையாக ஏற்பட கூடிய பேரழிவுகளை எதிர்த்து போராடுவதில் BIMSTEC நாடுகள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
Also Read: மலேசிய விமான ஒப்பந்தம்: இந்தியா மற்றும் துருக்கி இடையே போட்டி.. வெளியேறிய சீனா..?