டீஸ்டா நதி திட்டதிற்காக சீனாவிடம் 1B டாலர் கடன் கேட்கும் பங்களாதேஷ்..?

டீஸ்டா நதியின் விரிவான மேலாண்மை மற்றும் மறுசீரமைப்பு பணிக்காக வங்கதேசம் சீனாவிடம் 938.27 மில்லியன் டாலர் கடனை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு இந்தியா கவலையை தெரிவித்துள்ளது.

இந்த டீஸ்டா நதி திட்டத்தின் சாத்தியக்கூறுக்கான ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் பவர் கன்ஸ்ட்ரக்‌ஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் முடிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு திட்ட பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சீன நிதி உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த பங்களாதேஷ் கோரிக்கை முன்வைத்தது. 2016 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்களாதேஷ் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே 27 திட்டங்களுக்கு கடன் உதவி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதில் டீஸ்டா ஒப்பந்தம் இல்லை.

பின்னர் மற்றொரு திட்டம் நீக்கப்பட்டு டீஸ்டா சேர்க்கப்பட்டது. பங்களாதேஷ் மற்றும் சீனா இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பில், டீஸ்டா நதி திட்டம் உட்பட இரண்டு திட்டங்களுக்கு சீனா முன்னுரிமை அளித்தது. மற்றொரு திட்டம் டாக்கா நகரத்தின் கழிவுநீர் சேகரிப்பு திட்டமாகும்.

Also Read: சீனாவின் கப்பல் பொறி.. மற்றொரு நெருக்கடியை சந்திக்கும் உலக நாடுகள்..

டீஸ்டா திட்டத்தின் கீழ் பங்களாதேஷ் எல்லைக்குள் 115 மைல் நீளமுள்ள டீஸ்டா ஓடைகளில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும். அவற்றின் இரு கரைகளிலும் 115 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். ஆற்றின் இரு கரைகளிலும் தகவல் தொடர்பு அமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு இடங்களில் தடுப்பணை மற்றும் சாலை அமைக்கப்பட உள்ளன.

வறண்ட காலங்களில் பாசனத்திற்கு உதவும் வகையில் ஆற்றின் வழியாக பாயும் உபரி நிரை சேமிக்க ஒரு பெரிய நீர்தேக்கம் கட்டப்பட உள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 108 கிலோமீட்டருக்கு ஆற்றை தூர்வாருதல், ஆற்றின் இருபுறமும் 173 கிலோமீட்டருக்கு கரைகள் அமைத்தல். இரு கரைகளிலும் நகரங்களை அமைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

Also Read: இலங்கையை தொடர்ந்து துருக்கியின் பணவீக்கம் 70% அதிகரிப்பு..

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 800,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீஸ்டா நதி இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உருவாகி லால்மோனிர்ஹாட் வழியாக வங்கதேசத்தில் நுழைகிறது. 315 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ஆறு ரங்பூர், கைபந்தா,நில்பமரி மற்றும் குரிகிராம் வழியாக 154 கிலோமீட்டர் பயணித்து புல்ச்சாரியில் ஜமுனாவுடன் இணைகிறது.

Leave a Reply

Your email address will not be published.