ட்ரோன் இறக்குமதி செய்ய தடை.. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க முடிவு..

R&D, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக தேவையானவற்றை தவிர, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (DGFT) வெளிநாட்டு ஆளில்லா விமானங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து புதன்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ட்ரோன் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தடையில்லை.

முன்பை போலவே அனுமதிக்கப்படும், உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய எந்த அனுமதியும் தேவையில்லை. கடந்த செப்டம்பரில் மத்திய அமைச்சகம், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ட்ரோன் மையமாக மாற்றுவதற்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆகஸ்டு 2021 ஆம் ஆண்டு தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகளை மத்திய அமைச்சகம் வெளியிட்டது.

இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டமானது, ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்பவர்களுக்கு 20 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 120 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விரிவுபடுத்தப்படும்.

Also Read: குஜராத்தில் 1,66,000 கோடியை முதலீடு செய்ய உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனம்.

இந்த தொகையானது 2021 ஆம் நிதியாண்டில் அனைத்து உள்நாட்டு ட்ரோன் உற்பத்தியாளர்களின் மொத்த வருவாயை விட இரு மடங்கு அதிகம் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் அவர்கள் செய்யும் மதிப்பு கூட்டலில் 20 சதவீதம் வரை ஊக்கதொகையை பெறமுடியும்.

Leave a Reply

Your email address will not be published.