பாக். ஆண் குழந்தை பிறக்க தலையில் ஆணி அடித்து கொண்ட பெண்.. மதகுருமாரை தேடிவரும் போலிஸ்..
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கர்பிணி பெண் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தன் தலையில் ஆணி அடித்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. நான்காவதாக ஆண் குழந்தை பெற்று கொடுக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவதாக அந்த பெண்ணின் கணவன் மிரட்டியுள்ளான். இந்த நிலையில் அல்ட்ராசவுண்ட் மூலம் பார்த்ததில் மீண்டும் ஒரு பெண் குழந்தை என தெரியவந்துள்ளது.
இதனால் பயந்து போன அந்த பெண் தனக்கு தெரிந்த இஸ்லாமிய மதகுரு ஒருவரை அனுகியுள்ளார். இந்த நிலையில் அந்த மதகுரு அந்த பெண்ணிடம் ஒரு தாயத்து, ஓத வேண்டிய பொருட்கள் மற்றும் ஆணி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த ஆணியை தலையில் அடித்துகொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என அந்த இஸ்லாமிய மதகுரு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறையில் அந்த பெண் தனது தலையில் சுத்தியலால் ஆணியை அடித்துள்ளார். ஆணி நெற்றியின் மேல் தலையில் இறங்கிய நிலையில் அலறி துடித்த நிலையில் உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் நிபுணர் ஹைதர் சுலேமான் கூறுகையில், ஆணி அந்த பெண்ணின் மண்டை ஓட்டில் 5 சென்டி மீட்டர் அளவிற்கு மண்டை ஓட்டில் இறங்கியுள்ளது. மண்டை ஓட்டில் ஊடுருவியிருந்தாலும், ஆணி மூளையை எட்டவில்லை. தற்போது அவர் சுயநினைவின்றி சிக்ச்சை பெற்று வருவதாக டாக்டர் கூறியுள்ளார்.
இது தொடர்பான புகைபடங்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் தலைநகர் சிட்டி போலிஸ் அப்பாஸ் அஹ்சன் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து மனநல ஆலோசனை வழங்கவும், அவரது கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் மூடநம்பிக்கையை பின்பற்றி தலையில் ஆணி அடிக்க தூண்டிய இஸ்லாமிய மதகுருமாரை தேடி வருவதாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர் ஏன் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை என விசாரிக்க குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண் தானாக தலையில் ஆணியை அடித்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் அடித்தார்களா என விசாரித்து வருகின்றனர்.
Also Read: பாகிஸ்தானில் பாதிரியார் சுட்டுகொலை.. நடவடிக்கை எடுக்க இம்ரான்கானுக்கு கோரிக்கை..