பாக். கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண்.. 3 சீனர்கள் உயிரிழப்பு..
கராய்ச்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று சீன மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேனில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. வேனில் 8 பேர் இருந்தாக கூறப்பட்ட நிலையில் அதில் மூன்று சீனர்கள் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த தாக்குதலை பலூச் இராணுவத்தை சேர்ந்த ஷாரி பலோச் என்ற பெண் நடத்தியதாக கூறியுள்ளார்.
முதலில் சிலிண்டர் கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது வேன் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் நுழையும் போது பர்தா அணிந்த ஒரு பெண் வேன் அருகே சென்றபோது வேன் வெடித்து சிதறியுள்ளது.
Also Read: பாரமுல்லாவில் 2 JeM பயங்கரவாதிகளை கைது செய்தது இந்திய இராணுவம்..
வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாகவே சீனர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தாசு என்ற இடத்தில் சீனர்களை ஏற்றி சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்பது சீனர்கள் கொல்லப்பட்டனர்.
சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் வசித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தானியருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என கூறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Also Read: பாகிஸ்தானின் கராச்சியில் வெடிகுண்டு தாக்குதல்.. நான்கு சீனர்கள் உயிரிழப்பு..?
தனி நாடு கோரிக்கை கேட்டு பலூசிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தான் துறைமுகம் மற்றும் சுரங்கங்களில் வேலை பார்க்கும் சீனர்களை குறிவைத்து பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பல வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று நடந்த தாக்குதலுக்கும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.