ஆப்கன் விமான தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி.. இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு..
பாக்ராம் விமானத்தளத்தை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து சீனா அந்த விமானதளத்தை நோக்கி தனது நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. பாக்ராம் விமான தளத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் மூலமாக இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது அமெரிக்க துருப்புகளை திரும்ப பெற்று மிகப்பெரிய தவறு செய்து விட்டார். அவர் படைகளை திரும்ப பெற்றதன் மூலம் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக நிக்கி ஹேலி கடுமையாக சாடியுள்ளார்.
சீனா இந்தியாவுக்கு எதிராக பாக்ராம் விமான தளத்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இப்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கையில் இருப்பதால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை மற்றும் பலம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை அணுகி அமெரிக்கா தனது ஆதரவை தர வேண்டும். நமது கூட்டணி நாடுகளை வலுபடுத்த வேண்டும். அமெரிக்க இராணுவத்தை நவீன படுத்த வேண்டும். மேலும் சைபர் தாக்குதல் ரஷ்யா மூலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என நிக்கி கூறினார்.
அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தாலிபான்கள் கொண்டாடி வருகிறார்கள். அமெரிக்கா தனது பில்லியன் கணக்கான ஆயுதங்களையும் அங்கேயே விட்டு வந்துள்ளது. இது தாலிபான்களின் பலத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிக்கி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை விட்டு துருப்புகளை வெளியேற்றி பைடன் மிகப்பெரிய தவறை செய்து விட்டார். இனி அதனை நமது எதிரிகள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஹேலி கூறியுள்ளார். பாக்ராம் விமானப்படை தளம் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த தளத்தில் தான் பல ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகள் இருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.