சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானை தாக்குவதற்கு சமம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, சீனாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தான் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள குவாங்கு நகரில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எரிசக்தி, தொழில், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் அனைத்து வகையான ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பூட்டோ, சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானின் மீதான தாக்குதல் என கூறினார்.
கடந்த மாதம் ஏப்ரல் 26 அன்று கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று சீன ஆசிரியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் தரப்பு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என பூட்டோ தெரிவித்தார்.
Also Read: டீஸ்டா நதி திட்டதிற்காக சீனாவிடம் 1B டாலர் கடன் கேட்கும் பங்களாதேஷ்..?
மேலும் சின குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், பாகிஸ்தான் ஒரு சீன கொள்கையை ஆதரிக்கிறது. சீனாவின் அனைத்து முக்கிய நலன்களையும் பாதுகாப்பதில் சீனாவை ஆதரிப்பதாகவும் பூட்டோ தெரிவித்தார்.
Also Read: அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்..?
பாகிஸ்தானில் சீன குடிமக்களுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சீனா பாகிஸ்தான் நட்புறவை பிரிக்க நினைக்கும் எந்தவொரு இழிவான முயற்சியும் வெற்றியடையாது என பூட்டோ தெரிவித்துள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள பாகிஸ்தான் அமைச்சர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார்.
Also Read: பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு சீக்கியர்கள்..