இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் தாலிபான்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

இந்தியா மீது தாலிபான்களின் பார்வை பட்டால் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சமாஜிக் பிரதிநிதி சம்மேளனத்தில் உரையாற்றிய உத்திர பிரத்தேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வலிமையாக உள்ளது. இந்தியாவை தொட்டு பார்க்கும் எண்ணம் எந்த நாட்டிற்கும் வராது. இன்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தாலிபான்களால் பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளனர்.

தாலிபான்களின் பார்வை இந்தியா மீது திரும்பினால் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என்பது அவர்களுக்கு தெரியும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். பின்னர் SBSP கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை தாக்கி பேசிய யோகி ஆதித்யநாத், பெயரை குறிப்பிடாமல் அவரது சிந்தனை எல்லாம் குடும்ப வளர்ச்சியில் மட்டுமே இருப்பதாக கூறினார்.

மேலும் ராஜ்பர் பெயரை குறிப்பிடாமல், எனது அமைச்சரவையில் ராஜ்பர் சமூகத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். ஒருவர் மகாராஜா சுகல்தேவுக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என கூறினார். மற்றொருவர் நினைவிடம் கட்டுவதை எதிர்த்தார்.இன்று எனது அரசின் கீழ் மகாராஜா சுகல்தேவுக்கு பிரமாண்டமாக நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை

ஆனால் மகாராஜா சுகல்தேவுக்கு எதிர்கட்சிகள் என்ன செய்தது என கேள்வி எழுப்பினார். மேலும் SBSP கட்சி மட்டுமல்லாமல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்தார். சமாஜ்வாதி கட்சியின் பெயரை குறிப்பிடாமல், ராமர் பக்தர்களை கொன்றவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க தைரியம் இருக்கா என சமாஜ்வாதியை விளாசினார்.

Also Read: பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக இணைந்த இந்தியா..

Leave a Reply

Your email address will not be published.