குருத்வாராவில் தாக்குதல்.. சீக்கிய மற்றும் இந்துக்களுக்கு 100 இ-விசா வழங்கிய மத்திய அரசு..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு 100 க்கும் மேற்பட்ட இ-விசாவை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய சமூகத்தின் வழிபாட்டு தளமான குருத்வாரா கார்டே பர்வன் அருகே சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட நிலையில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று பேரை சுட்டுக்கொன்றதாக தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருத்வாராவில் அதிகாலை 30 பேர் உள்ளே இருந்த போது குருத்வாராவிற்க வெளியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குருத்வாராவிற்கு வெளியே வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் வெடிக்க செய்யப்பட்டுள்ளது. முதலில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசியுள்ளனர். இதனால் குருத்வாரா வாயில் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: CAA, NRC போன்ற உள்நாட்டு கலவரத்தால் நாட்டிற்கு 50 லட்சம் கோடி இழப்பு..? GPI அறிக்கையில் தகவல்..

இதற்கு முன் மார்ச் 2020 ஆம் ஆண்டு காபூலில் உள்ள முக்கிய குருத்வாராவான ஹர் ராய் சாஹிப்பில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் தாக்கியதில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் போது ஆப்கனில் 700 குறைவான சீக்கிய மற்றும் இந்துக்களே இருந்தனர்.

Also Read: உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள்.. தொழுகைக்கு பிறகு யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்: இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்

அதுமுதல் சிறுபான்மையினர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிறுபான்மையினருக்காக முதல் கட்டமாக மத்திய் அரசு 100 இ-விசா வழங்கியுள்ளது. விரைவில் அனைவரும் இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாகிஸ்தானில் இருந்து வந்த 17 இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிய குஜராத் அரசு..!

Leave a Reply

Your email address will not be published.