ஜம்மு காஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல்.. பொதுமக்கள் ஒருவர் உயிரிழப்பு..

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். மேலும் சிஆர்பிஎப் வீரர்களின் பதுங்கு குழிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள CRPF வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் கரன் நகரில் நடந்த முதல் தாக்குதலில் மஜீத் குரு என்ற உள்ளூர் வாசியை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை ஸ்ரீநகர் போலிசார் மீட்டு அருகில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இரண்டாவது தாக்குதல் அனந்தநாக் கேபி சாலையில் உள்ள CRPF பதுங்கு குழிகள் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் கையெறி குண்டு பதுங்கு குழிக்கு அருகில் விழுந்ததால் வீரர்கள் யாருக்கும் எந்த காயமும் இல்லை.

Also Read: இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா.. அஜித் தோவலுடன் ஆலோசனை..

மூன்றாவதாக ஸ்ரீநகரின் பாட்மாலுவில் முகமது ஷாபி டார் என்ற உள்ளூர் நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவரை அருகில் உள்ள SMHS மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மூன்று தாக்குதல்களும் ஆறு மணி நேரத்திற்குள் நடந்துள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து அப்பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

Also Read: இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வரும் S-400..?

Also Read: உ.பியில் பிரமோஸ் ஏவுகணைக்கான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க திட்டம்..?

Leave a Reply

Your email address will not be published.