அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு.. 6 பேரை கைது செய்த அசாம் போலிசார்..?

வங்கதேசத்தை தளமாக கொண்ட பயங்கரவாத குழுவான அன்சாருல் இஸ்லாத்துடன் தொடர்புடைய 6 பயங்கரவாதிகளை அசாம் மாநிலத்தின் பர்பேட்டா மாவட்டத்தில் போலிசார் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்துள்ளனர்.

இந்த அன்சாருல் இஸ்லாம் அமைப்பு இந்திய துணை கண்டத்தில் உள்ள அல்-கொய்தா (AQIS) உடன் நேரடி தொடர்பு வைத்துள்ளது. பர்பெட்டா காவல்துறை கண்காணிப்பாளர் அமிதவ சின்ஹா கூறுகையில், அல் கொய்தா உடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை ஹவ்லியில் உள்ள ஒரு மதரஸாவில் இருந்து கைது செய்ததாக சின்ஹா கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 4 அன்று பர்பேட்டாவில் நடந்த மற்றொரு கைது நடவடிக்கையில் விசாரணை நடைபெற்று வந்த போது அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 10 நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண் பிரதமர் மோடிக்கு கண்ணீருடன் கோரிக்கை..!

அவர்களிடம் இருந்து 15 மொபைல் போன்கள், 20 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் பார்பெட்டா மாவட்டத்தில் வசிப்பவர்கள். பார்பெட்டாவை சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

Also Read: இஸ்ரேல் உடனான உறவை இந்தியா கைவிட வேண்டும்: கம்யூனிஸ்ட் தீர்மானம்

மார்ச் 4 அன்று வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேரை பார்பெட்டா மாவட்டத்தில் போலிசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அன்சாருல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தற்போது அசாமில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.