கர்நாடகாவில் அமைகிறது ஆசியாவின் மிகப்பெரிய கடற்படைத் தளம்..? INS விக்ராந்தை நிறுத்த முடிவு..

கர்நாடகாவின் கார்வாரில் அமைந்துள்ள கடம்பா கடற்படை தளத்தில் இந்தியாவின் விமானந்தாங்கி கப்பல்கள், 30 போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த முடிவு செய்யப்ட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை தளமாக கடம்பா இருக்கும்.

இந்த கடற்படைத்தளம் 11,000 ஏக்கரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் விமானந்தாங்கி போர்கப்பலான INS விக்ராந்த் நிறுத்தப்பட உள்ளது. மேலும் போர்கப்பல்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் கடற்படை உருவாக்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று கார்வார் சென்றடைந்தார். இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்கிறார். மேலும் இன்று நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விமானந்தாங்கி போர்கப்பலான INS விக்ராந்த் கடல் சோதனையை முடித்த நிலையில் ஆகஸ்டு மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. பின்னர் INS விக்ராந்த் கடம்பா கடற்படை தளத்தில் நிறுத்தப்படும். இதற்கு முன்னதாக INS விக்ராந்த் சென்னைக்கு அருகே காட்டுப்பள்ளியில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்படும் என கூறப்பட்டது.

Also Read: வெளியே கசிந்த இராணுவ ரகசியம்.. 4 உயர் இராணுவ அதிகாரிகளை தூக்கிலிட்ட சீனா..

ஆனால் தற்போது கடம்பா கடற்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளது. கடம்பா கடற்படை தளம் சிவில் விமான செயல்பாடுகளையும் அனுமதிக்கும். ஒடுபாதையை விரிவுபடுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது மற்றும் மாநில பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். விரிவாக்கப்பட்ட ஓடுபாதையானது கடற்படையின் கடல்சார் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை இயக்க அனுமதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்..

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் சிங்கும் பங்கேற்றுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்படை தளமாக கார்வார் கடற்படை தளம் இருக்கும். இதன் மூலம் அரேபியன் கடல் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும்.

Also Read: மியான்வாலியில் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம்..

Leave a Reply

Your email address will not be published.