ஈராக்கில் பீரங்கி தாக்குதல்.. துருக்கி ஈரான் இடையே முற்றும் மோதல்..

தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், துருக்கி மற்றும் ஈரான் இடையே மற்றொரு போர் வெடிக்கும் சூழல் நிலவி வருகிறது. இவை ஈராக்கை மையப்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையே இந்த மோதல் வெடித்துள்ளது.

ஈராக், துருக்கி மற்றும் ஈரானின் எதிர் தரப்புக்கு ஆதரவு அளித்து வருவதால் துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்துகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் ஈராக்கின் பாதுகாவலன் ஈரான் தான் என காட்டிகொள்ள ஈராக்கில் உள்ள குர்துகளுக்கு உதவ ஈரான் முன்வந்துள்ளது.

ஈராக்கின் வடக்கு காண்டில் மலைகளுக்கு அப்பால் உள்ள குர்துகளை இலக்காக கொண்டு துருக்கி வான், ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஈராக்கை பாதுகாக்க ஈரான் துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. துருக்கி, ஈராக் மற்றும் ஈரான் நாட்டிற்கு மையத்தில் உள்ள ஈராக்கின் யாசிதி சிறுபான்மையினர் வசிக்கும் சின்ஜார் மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் துருக்கிக்கு எதிரான போரட்டத்தில் குர்துகளுக்கு ஈராக் மற்றும் ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளன. குர்துகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதால், துருக்கி தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. துருக்கியில் இருந்து ஈரானுக்கு செல்லும் அராஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளில் துருக்கி அணை கட்டும் பணியை துவங்கி இருக்கிறது. இதற்கு ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

1997 ஆம் ஆண்டு நியூயார்க் உடன்படிக்கையில் துருக்கி கையெழுத்திடவில்லை, இதனால் துருக்கி மீது சர்வதேச அளவில் வழக்கு தொடர ஈரானால் முடியவில்லை. ஈரானிலோ அல்லது ஈராக்கிலோ சுற்றுச்சூழல் நிலைமையை மாற்றுவதற்கு துருக்கி முயற்சிக்க கூடாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், ஈரான் இந்த நதிநீர் பிரச்சனையை தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக பார்ப்பதாகவும், கடந்த ஆண்டு திறக்கப்பட்ட டைக்ரிஸில் துருக்கியால் கட்டப்பட்ட இலிசு அணையால் ஈராக் மட்டுமின்றி ஈரானும் சுற்றுசூழல் அபாயத்தை எதிர்கொள்வதாகவும், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸில் நீர் ஓட்டம் குறைவதால், வறட்சி ஏற்பட்டு தூசி புயல்கள் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

Also Read: எனது வாக்கு குடியரசு கட்சிக்கு தான்.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு..

ஈரானின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள துருக்கி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டான்ஜு பில்ஜிக், ஈரானின் கூற்றுகள் விஞ்ஞானத்திற்கு வெகு தொலைவில் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவை தான் தூசி மற்றும் மணல் புயல்களின் உண்மையான ◌தோற்றம் என கூறியுள்ளார்.

Also Read: அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்..?

தற்போது நீர் பிரச்சனையால், உணவு பொருட்களுக்கான அரசு மானியங்களை குறைக்கும் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் முடிவுக்கு எதிராக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இதனால் துருக்கிக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. ஈராக்கில் உள்ள குர்துகளுக்கு ஈரான் உதவி செய்வதால், ஈரானின் தண்ணீர் பிரச்சனையை துருக்கி கையில் எடுத்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: நெருக்கடியை சமாளிக்க பணத்தை அச்சடிக்க உள்ளதாக இலங்கை பிரதமர் அறிவிப்பு..?

Leave a Reply

Your email address will not be published.