ஹனிட்ராப் மூலம் பாகிஸ்தான் பெண் ஏஜென்டுக்கு இராணுவ ரகசியங்களை கசியவிட்ட இராணுவ வீரர்..

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசிய விட்ட இந்திய இராணுவ வீரர் சாந்திமாய் ராணா (24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ராஜஸ்தான் காவல்துறையின் சிஐடி புலனாய்வு பிரிவினரால் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவர் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் பெண் ஏஜென்ட் மூலமாக ஹனிட்ராப் செய்யப்பட்டு இந்திய இராணுவம் தொடர்பான ரகசியங்களை கசிய விட்டுள்ளார். சாந்திமாய் ராணா மேற்கு வங்க மாநிலம் பகுண்டா மாவட்டத்தில் உள்ள கஞ்சன்பூர் கிராமத்தை சேர்ந்தவர். அவர் ஜெய்ப்பூரில் உள்ள பிரிவில் பணியாற்றி வருகிறார். 2018 முதல் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

ராஜஸ்தான் காவல்துறையின் புலனாய்வு பிரிவின் இயக்குநர் உமேஷ் மிஸ்ரா கூறுகையில், பாகிஸ்தான் பெண் ஏஜென்டுகளான குர்னூர் கவுர் என்கிற அங்கிதா மற்றும் நிஷா ஆகியோர் சமூக வலைதலங்கள் மூலம் சாந்திமாய் ராணாவை தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் ராணாவின் நம்பரை பெற்று வாட்ஸ் அப்பில் உரையாடி வந்துள்ளனர்.

முதலில் ராணாவின் நம்பிக்கையை பெற்ற அவர்கள் பின்னர் அவரிடம் இருந்து இராணுவ தகவல்களை பெற தொடங்கியுள்ளனர். அதற்கு பதிலாக ராணாவின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளனர். ராணா 2018 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் நீண்ட காலமா பாகிஸ்தான் ஏஜெண்டுடன் வாட்ஸ் அப், வீடியோ மற்றும் ஆடியோ மூலம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஏஜென்டுகளில் ஒருவரான அங்கிதா, தான் உத்திரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் வசிப்பவர் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் ராணுவ பொறியிய்ல் சேவையில் பணிபுரிந்து வருவதாகவும் ராணாவிடம் கூறியுள்ளார். மற்றொரு ஏஜென்டான நிஷா, தான் இராணுவ செவிலியர் சேவையில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் நெருக்கம் அதிகரித்த நிலையில், இந்திய இராணுவம் தொடர்பான இரகசிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை ராணாவிடம் கேட்டுள்ளனர். காதலில் வீழ்ந்த ராணா தனது படைப்பிரிவின் ரகசிய ஆவணங்களையும் பயிற்சி வீடியோக்களையும் அந்த பாகிஸ்தான் ஏஜென்டுக்கு அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.