ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற இராணுவம்.

காஷ்மீரில் இன்று அதிகாலை நடந்த தாக்குதலில் ஒரி பாகிஸ்தானியர் உட்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 4:45 மணி அளவில் ஜம்மு போலிசார் மற்றும் இராணுவம் இணைந்து புல்வாமா மாவட்டம் சந்த்காம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் நடந்த துப்பாக்கி சண்டையில் காலை 8 மணி அளவில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 எம்-4 கர்பைன்கள், 1 AK வகை துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் இன்ஸ்பெக்டர் விஜய் குமார் கூறினார். இன்ஸ்பெக்டர் விஜய் குமார் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு 171 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவற்றில் 19 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை என்கவுன்டர்களில் 7 பயங்கரவாதிகளும், எல்லையில் ஊடுருவ முயன்றபோது ஒரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த எட்டு பேரில் திங்களன்று ஸ்ரீநகரின் கார்டன் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட சலீம் பர்ரே லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கமாண்டர் ஆவான்.

Also Read: தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டரை போட்டுதள்ளிய இந்திய இராணுவம்..

கடந்த பத்து நாட்களில் மட்டும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த டிசம்பர் 30 அன்று புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியையும் இராணுவம் சுட்டுக்கொன்றது. தற்போது சாந்த்காம் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக இன்ஸ்பெக்டர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

Also Read: எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய இராணுவம்..

Leave a Reply

Your email address will not be published.