பயங்கரவாத நடவடிக்கையின் போது காயமடைந்த இராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜூம் என்ற இராணுவ நாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கின் கோகர்நாக் பகுதியில் ஞாயிற்றுகிழமை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இராணுவ வீரர்கள் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது ஜூம் பயங்கரவாதிகளை தாக்கியபோது பயங்கரவாதிகள் ஜூமை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் ஜூமை தாக்கியது. இருப்பினும் காயங்கள் இருந்தபோதும் ஜூம் பயங்கரவாதிகளை தாக்கியது. பின்னர் பாதுகாப்பு படையினரால் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஶ்ரீநகரில் உள்ள 54 அட்வான்ஸ் பீல்ட் கால்நடை மருத்துவமனையில் ஜூமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அக்டோபர் 12 அன்று ஜூமிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜூம் சீரான உடல் நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11.45 மணி அளவில் திடீரென ஜூமிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசடைந்த நிலையில், 12 மணி அளவில் ஜூம் உயிரிழந்ததாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூமின் ஈடு இணையற்ற துணிச்சல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.