5 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே.. பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை..

இராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே 5 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

நவம்பர் 15 முதல் 19 வரை ஐந்து நாள் பயணமாக எம்.எம்.நரவனே இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் பல்வேறு பாதுகாப்பு தொடர்பாக பேச உள்ளார். மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தையும் எம்.எம்.நரவனே பார்வையிட உள்ளார்.

ஏற்கனவே ஆகஸ்டு மாதம் விமானப்படை தளபதி RKS.பதௌரியா இஸ்ரேல் சென்று பாதுகாப்பு தலைவர்களுடன் இருநாட்டு பாதுகாப்பு பற்றி உரையாடினார். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் ஆகியோர் இஸ்ரேல் சென்று வந்த நிலையில் தற்போது எம்.எம்.நரவனே பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ அதிகாரிகளுடன் நரவனே பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செவ்வாய் அன்று இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே அடுத்த தலைமுறை ரோபோட்டிக்ஸ், தொழிற்நுட்பங்கள், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்யூட்டர்ஸ் போன்ற தயாரிப்புகளை கூட்டாக உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

Also Read: இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..

மேலும் போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்கப்பல்கள் குறித்தும், இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இந்த பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால் புதிய அரசாங்கத்துடன் உறவை புதுபிக்கும் வகையில் இந்த பயணம் இருக்கும். ஏற்கனவே பல பாதுகாப்பு தடவாளங்களை இரு நாடுகளும் சேர்ந்து அல்லது இஸ்ரேல் உதவியுடன் இந்தியா உருவாக்கி வருகிறது. மேலும் இஸ்ரேலிடம் இருந்து அதிக அளவில் இராணுவ தடவாளங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட INS வேலா நீர்மூழ்கிக்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.