இந்திய இராணுவம் மற்றும் விமானப்படைக்கு புதிதாக LUH மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்..

இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்கு 12 லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்களை (LUH) இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்கு 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை (LCH) வாங்க பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. அதில் 10 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும், 5 ஹெலிகாப்டர்கள் இந்திய இராணுவத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 12 லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்திய இராணுவம் 95 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை எதிர்பார்க்கும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பெங்களுரில் LCH ன் முதல் படைப்பிரிவை நிறுவியது. இந்த படைப்பிரிவு விரைவில் சிக்கிம், அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள கிழக்கு படைக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு சீனா உடனான மோதலுக்கு பிறகு லடாக்கில் 2 LCH ஹெலிகாப்டர்கள் உண்மையான கட்டுப்பாட்டு கோடு அருகே நிலைநிறுத்தப்பட்டன. இதில் HAL ன் புதிய தலைமுறை சக்தி எஞ்சின். பிரெஞ்சு எஞ்சின் தயாரிக்காளரான சஃப்ரானுடன் இணைந்து உருவாக்கப்பட்டவை மற்றும் 5.5 டன் எடை கொண்ட இவை 20,000 அடி உயரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 11 போயிங் அப்பாச்சி AH-64E ஹெலிகாப்டரையும் வாங்க இராணுவம் ஆர்வமாக உள்ளது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹெல்ஃபயர் துல்லியமான தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் வானில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் ஸ்டிங்கர் ஏவுகணைகளுடன் வருகின்றன.

இந்திய விமானப்படையின் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களில், 11 லாங்போ தீ கட்டுப்பாட்டு ரேடார் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. லாங்போ ரேடார்களுடன் சேர்ந்து, இந்த ஏவுகணைகள் எதிரி கவசத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தும். இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பெரும்பாலும் டாங்கி கொலையாளிகள் என அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.