இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை வாங்க உள்ள அர்ஜென்டினா..? பின்னடைவில் சீனா..
அர்ஜென்டினா அதன் மிராஜ் போர் விமானங்களுக்கு 2015ல் ஓய்வு அளித்த நிலையில், புதிதாக சூப்பர்சோனிக் போர் விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் சீனா முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் தேஜஸ் மற்றும் சீனாவின் JF-17 ஆகியவை முதல் இரண்டு போட்டியாளராக உள்ளன. இந்த JF-17 போர் விமானமானது பாகிஸ்தான் மற்றும் சீனாவால் இணைந்து உருவாக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் அர்ஜென்டினாவின் பிரதிநிதிகள் குழு HAL வசதியை பார்வையிட்டது.
அதேபோல் கடந்த மாதம் செங்டு நகரில் அமைந்துள்ள சீனா நேஷனல் ஏரோ டெக்னாலஜி இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (CATIC) வசதிகளை அர்ஜென்டினா குழு பார்வையிட்டதை அந்நாட்டு ஊடகங்கள் உறுதி படுத்தியுள்ளன. மேலும் CATIC பணியாளர்கள் அர்ஜென்டினா பிரதிநிதிகளுக்கு பல்வேறு தொழிற்நுட்ப ஆவணங்கள் மற்றும் JF-17 தண்டர் மாடலை பற்றிய ஒரு விமான சிமுலேட்டரையும் கொடுத்துள்ளனர்.
அர்ஜென்டினா போர் விமானங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யாத நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டும் Tejas MK-1 மற்றும் IAI Kfir NG ஆகியவற்றிற்கான தங்கள் சலுகைகளை புதுப்பித்துள்ளன. இருப்பினும் சீன போர் விமானங்களை தேர்ந்தெடுப்பது புவிசார் மூலோபாய மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Also Read: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட “பாரத் 150” ட்ரோனை வெளியிட்ட கல்யாணி குழுமம்..
பல அமெரிக்க தலைவர்களும் அதிகாரிகளும் அர்ஜென்டினா சீன போர் விமானங்களை வாங்குவதை விரும்பவில்லை. எனவே அர்ஜென்டினா தேஜஸ் போர் விமானங்களை வாங்கவே அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: இந்திய விமானப்படைக்கு புதிதாக 6 எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க உள்ள IAF..