பாஜகவில் இணைகிறார் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ்..?

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் இன்று அல்லது நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபர்ணா யாதவ், பிரதமர் மோடி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தீவிர ரசிகை என கூறப்படுகிறது.

கடந்த ஒரு வார காலமாக குறைந்தது 14 MLAக்கள் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல சமாஜ்வாதி கட்சி MLAக்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர் அல்லது இணைவதற்கு தயாராக உள்ளனர். அதேபோல் இன்று லக்னோவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசிம் அருண் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அந்த வகையில் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபர்ணா யாதவ் 2017 உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் 33,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

பாஜகவில் அவர் இணையும் பட்சத்தில் லக்னோ கான்ட் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாகவே NRC மற்றும் ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களில் அபர்ணா யாதவ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரடியாக மோதியுள்ளார்.

இதுதவிர பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டுவதற்கு 11 லட்சம் ரூபாயை நன்கொடையாக அபர்ணா யாதவ் வழங்கியிள்ளார். நன்கொடை வழங்கும் போது, நான் தானாக முன்வந்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளேன். நன்கொடை வழங்கும்போது கடந்த காலத்தில் தனது குடும்பம் செய்த தவறிற்கு என்னால் பொறுப்பேற்க முடியாது என கூறினார்.

Also Read: உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.. பாஜக வாக்குகளை பிரிக்கும் சமாஜ்வாதி..

ஏனென்றால் கடந்த 1990 ஆம் ஆண்டு உ.பி முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்த போது அவரது பதவி காலத்தில், பாபர் மசூதி அருகே கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு முலாயம் சிங் யாதவ் உ.பி. காவல்துறைக்கு சர்ச்சைகுரிய உத்தரவை பிறப்பித்தார். இதற்கு பதவடி கொடுக்கும் வைகையில் அபர்ணா இவ்வாறு பேசியுள்ளார். மேலும் இந்தியாவின் குணம், கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையின் மையம் ராமர் என்று கூறிய அபர்ணா, ஒவ்வொரு இந்தியரும் ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என கூறினார்.

Also Read: காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி MLA அதிதி சிங் மற்றும் சிக்ரி MLA பந்தனா சிங் பாஜகவில் இணைந்தனர்..

முன்னதாக ஃபிரோசாபாத் மாவட்டத்தின் சிர்சாகஞ்ச் தொகுதி சமாஜ்வாதி MLA ஹரஓம் யாதவ், புதன்கிழமை டெல்லியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் முலாயம் சிங் யாதவின் நெருங்கிய உறவினர் ஆவார். தற்போது உத்திர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 10,14, 20,23,27 மற்றும் மார்ச் 3,7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 105 பேர் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.