இந்திய விமானத்தை கடத்திய மற்றொரு பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை..?

இந்தியாவின் IC 814 பயணிகள் விமானத்தை கடத்திய மற்றொரு பயங்கரவாதியான ஜஃபருல்லா ஜமாலி பாகிஸ்தானின் கராய்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதி படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. ஜஃபருல்லா ஜமாலி தான் விமான கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் விமான கடத்தலில் ஈடுபட்ட சக பயங்கரவாதியான ஜாகூர் மிஸ்திரி அடையாளம் தெரியாத நபர்களால் கராய்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜாகூர் மிஸ்திரி கராச்சியில் ஜாஹித் அகுந்த் என்ற போலி அடையாளத்துடன் கராச்சியில் கிரசண்ட் பர்னிச்சர் வியாபாரம் செய்து வந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அதனை தொடர்ந்து விமானக்கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு பயங்கரவாதியான ஜஃபருல்லா ஜமாலியும் கொல்லப்ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 24, 1999 ஆம் ஆண்டு நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த IC 814 விமானத்தை பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தினர்.

Also Read: இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்திற்கு விரைவில் ஒப்புதல்..?

ஹர்கத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் இந்த விமானத்தை கடத்தினர். விமானத்தில் 178 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் பணைய கைதிகளாக சிறை வைக்கப்பட்டனர். 200 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் பயங்கரவாதி மௌலானா மசூத் அசார் உட்பட இந்திய சிறைகளில் உள்ள 35 பயங்கரவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு இந்தியா மசூத் அசார் உட்பட மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்பு கொண்ட பிறகு டிசம்பர் 31, 1999 அன்று ஒரு பயணியை தவிர மற்ற அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ரூபின் கட்யால் என்ற புதிதாக திருமணமான நபரை பயங்கரவாதிகள் கொன்றனர்.

Also Read: இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதி 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுட்டுக்கொலை..?

இருப்பினும் ஜஃபருல்லா ஜமாலி விமான கடத்தலில் ஈடுபடவே இல்லை என்றும், கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட ஜாகூர் மிஸ்திரியின் மற்றொரு பெயர் தான் ஜஃபருல்லா ஜமாலி என்றும் தகவல் பரவி கொண்டிருக்கிறது. இதில் எது உண்மை என இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தை இந்தியாவின் உளவு அமைப்பான ரா தான் மேற்கொண்டதாக கடந்த வாரத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.