ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்..

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் மற்றொரு இராணுவ வீரர் உயிரிழந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு பூஞ்ச் மாவட்டத்தில் 5 இராணுவ வீரர்கள் பயங்கரவாத நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்தனர். அதனை தொடந்து அப்பகுதி இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று மாலை பூஞ்ச் மாவட்டம் ரஜோரி வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஒரு இராணுவ வீரர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தனர்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம்..

அவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரண்டு இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சுற்றி வளைக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

பூஞ்ச் மாவட்டத்தில் திவீரவாதிகள் பதுங்கி இருப்பதால் பல நாட்களாக இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு காரணம் கருதி ஜம்மு-பூஞ்ச்-ரஜோரி தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

Also Read: அருணாச்சல் எல்லையில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *