அமெரிக்கா வல்லரசு என்ற தகுதியை இழந்துவிட்டது: பென் வாலஸ்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கனை தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சி அமைக்கவும் உள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார். ஆப்கனில் இருந்து அமெரிக்கா அவசர அவசரமாக வெளியேறியுள்ளது. இனி அமெரிக்கா ஒரு வல்லரசு நாடு கிடையாது என வாலஸ் கூறினார்.
இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பிறகு தாலிபான்களை அழிக்கவே அமெரிக்கா ஆப்கானிஸ்தானிற்கு தனது படைகளை அனுப்பியது. 20 வருடமாக தாலிபான்களுக்கு எதிராக போரிட்டு தற்போது மீண்டும் தாலிபான்கள் வசமே ஆட்சியை அமெரிக்க ஒப்படைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
பிரிட்டன் ஒரு வல்லரசு நாடு கிடையாது. ஆனால் இனி அமெரிக்க வல்லரசு நாடு கிடையாது. ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அதிபர் ஜோ பைடனே காரணம் என பென் வாலஸ் கூறினார். மேலும் 2020 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாலிபான்களுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தையும் பென் வாலஸ் விமர்சித்துள்ளார்.
ஆப்கனில் அமெரிக்கா சூழ்ச்சி செய்து விட்டது. அவர்கள் வெளியேறிய பிறகு தாலிபான்கள் மின்னல் வேகத்தில் தலைநகரை கைப்பற்றி விட்டனர். ஆப்கனில் தனக்கு உதவி செய்தவர்களையும் அமெரிக்க முழுமையாக வெளியேற்றவில்லை என பென் தெரிவித்தார்.