பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் அல்கொய்தா தளபதி சுட்டுகொலை..
ஏமனின் தென்கிழக்கு மாகாணமான ஹட்ராமவுட்டில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் அல்-கொய்தா ஏமன் கிளையின் தளபதி சனிக்கிழமை கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் ஹட்ராமவுட்டில் உள்ள அல்-கொய்தா மறைவிடத்தை சோதனை செய்தனர். அப்போது ஹத்ராமவுட்டின் சுடாஃப் பகுதியில் அல்-கொய்தா பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையயே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஹட்ராமவுட்டில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் தேடப்படும் அல்-கொய்தாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஏமன் அதிகாரிகள் கூறுகையில், இந்த நடவடிக்கை அரபு நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கான பயங்கரவாத குழுக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள யேமனை தளமாக கொண்ட அல்-கொய்தா (AQAP) நெட்வொர்க்கின் தெற்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான பல தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. ஏமன் அரசாங்கத்திற்கும் ஹூதி போராளிகளுக்கும் இடையே பல வருடங்களாக நடந்து வரும் மோதலை பயன்படுத்தி அல்கொய்தா தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.