ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். ஏவுகணை ஏற்றுமதியிலிருந்து இந்தியா வருவாயை அதிகரிக்க இது உதவும் என கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆத்ம நிர்பர் பாரத்தின் கீழ், இந்தியா பல்வேறு வகையான பாதுகாப்பு தடவாளங்கள் மற்றும் ஏவுகணைகளை உற்பத்தி வருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவான ஒப்புதல்களுக்கான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் ஏவுகணை 25 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்க கூடிய வான் ஏவுகணை ஆகும். சில வாரங்களுக்கு முன்பு இந்தியா ஆகாஷ் சோதனை செய்து பார்த்தது.

டிஆர்டிஓவால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை அமைப்பு, போர் விமானம், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற வான்வழி ஏவுகணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கும்.

மேலும் 5 பில்லியன் டாலர் அளவிற்கு பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நட்பு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கும், அதிக மதிப்புள்ள பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்ய இது உதவும் என அமைச்சர் கூறினார்.

ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய அளவிலான இராணுவ தடவாளங்களை ஏற்றுமதி செய்ய முடியும் என அமைச்சர் கூறினார்.

அமைச்சரவையின் இந்த முடிவு, “நமது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், அவற்றை உலகளவில் போட்டிக்கு உட்படுத்துவதற்கும் உதவும்” என்று கூறினார்.

உள்நாட்டுத் தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்வதற்காக, தற்போது உள்ள ரூ .70,000 கோடியிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 1,40,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *