இந்து பொருளாதார புறக்கணிப்புக்கு அஜ்மீர் தர்கா அழைப்பு.. அஜ்மீர் தர்காவையே புறக்கணித்த இந்துக்கள்..

ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவின் காதிம்கள் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் நிலையில், அஜ்மீர் தர்காவின் காதிம் சர்வார் சிஷ்டி, இந்து கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என கூறிய ஆடியோ வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாக வைரலாகும் ஆடியோவில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக அஜ்மீர் ஷெரீப்பில் உள்ள நல்லா பஜார் மற்றும் தர்கா பஜாரில் உள்ள இந்துக்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். மதியம் 12 வரை கடைகளை அடைக்க அழைப்பு விடுத்தனர். இந்த மக்களை பரிதாபமாக பார்க்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

தர்கா பஜார் பகுதி மற்றும் நல்லா பஜார் பகுதியில் உள்ள கடைகளில் யாரும் எதையும் வாங்க வேண்டாம். அவர்கள் எந்த தைரியத்தில் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் எங்கள் முன் கடைகளை மூடுகிறார்கள். இந்த வார்த்தையை உங்களால் முடிந்த எல்லா இடங்களிலும் பரப்புங்கள். இதனால் யாரும் அவர்களிடம் ஒரு ரூபாய் கூட பரிவர்த்தனை செய்ய மாட்டார்கள்.

முன்னதாக வெளியிட்ட ஆடியோவில், இப்போது நாட்டில் உள்ள சூழ்நிலை, மக்கள் நிந்தனை செய்யும் அளவுக்கு உள்ளது. முழு இந்துஸ்தானையும் அதிர வைக்கும் அளவுக்கு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என ஆடியோவில் கூறியுள்ளார். இதேபோல் அஜ்மீர் தர்காவின் மற்றொரு காதிம் கௌஹர் சிஸ்டி என்பவர் கன்ஹையா லாலை கொன்றவரை சந்திதுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜூன் 17 அன்று நுபுர் சர்மாவின் தலையை துண்டிக்க கௌஹர் சிஸ்டி அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டார். பின்னர் கன்ஹையா லாலின் கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரியை சந்திக்க அவர் உதய்பூருக்கு சென்றுள்ளார். அதே நாளில் நுபுர் சர்மாவிற்கும் அவரது ஆதரவாளருக்கும் ரியாஸ் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார். இந்த் கௌஹர் சிஸ்டியின் மாமா தான் வணிகதை புறக்கணிக்க கூறிய சர்வார் சிஷ்டி.

இந்த நிலையில் காதிம்களின் இந்துக்களின் எதிரான பேச்சால் அஜ்மீர் தர்காவிற்கு பார்வையாளர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த வெள்ளிக்கிழமை நேர்மாறாக மிக குறைவாகவே இருந்தது. பல ஹோட்டல்களில் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உணவகங்களிலும் வருகை குறைவாகவே இருந்தது.

காதிம் சையத் ஐனுதீன் சிஷ்டி கூறுகையில், அஜ்மீரின் பொருளாதாரம் தினமும் நகரத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை நம்பியே உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக கூட்டமாக இருக்கும். காதிம்களின் வெறுக்கத்தக்க கருத்துக்களால் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

இந்து பக்தர்கள் அஜ்மீர் தர்காவிற்கு வருவதை தவிர்த்து விட்டனர் என கூறியுள்ளார். ஜன்னத் குரூப் ஆஃப் ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் கான் கூறுகையில், வெறுப்பூட்டும் பேச்சுக்களால் பார்வையாளர்களின் வருகையை பாதித்துள்ளது. புனித நாளில் கூட யாரும் வராததால் ஹோட்டல்கள் நிரம்பவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.